ஆயிரம் ஹைக்கூ♥ நூல் ஆசிரியர் ! இரா.இரவி♦ நூல் விமர்சனம் ! ஞா.சந்திரன்

ஆயிரம் ஹைக்கூ♥

நூல் ஆசிரியர் ! கவிஞர் இரா.இரவி♦

நூல் விமர்சனம் !  
 ஞா.சந்திரன்! முதுநிலைத் தமிழாசிரியர் !புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ,மதுரை .♦

இந்நூலை படிக்க படிக்க இனிக்கிறது.படித்து முடித்தப் பிறகு மனம் இந்நூலை மட்டுமே நாடுகிறது.இலவசமாக தமிழ்வழிக்கல்வி கொடுத்தும் ஆங்கிலத்தையே மக்கள் நாடுவதை''

கூலி கொடுத்தும்
கரும்பு தின்ன மறுக்கின்றனர்
தமிழ்வழிக்கல்வி"

ஏழைகள் தூரத்திலும்;காசு உள்ளவர்கள் கடவுள் காலடியில் நின்று வணங்க கோயிலில் அனுமதிப்பதை

"கடவுளின் முன்
அனைவரும் சமம்
சிறப்பு தரிசனம்?".

நம் நாட்டை சுற்றி கடல் மட்டும் இல்லை கடனும் இருக்கிறது என்பதை,

"அரசுக்கு
சளைத்தவனல்ல குடிமகன்
கடன் பெறுவதில்"....

என்பது போன்ற ஹைக்கூ கவிதைகள் சமுதாய சரவெடிகளாக வெடிக்கின்றன.சுற்றலா அலுவலர் இரவி
சுற்றி வளைக்காமல் மனதில் பட்ட கருத்துக்களை மனதைச்சுட்ட கருத்தக்களை நேரடியாக வௌிக்காட்டியுள்ளார்.இந்நூலில் இருப்பது 'ஹைக்கூ கவிதைகள் அல்ல;ஹைடெக் கவிதைகள்".

தொடரட்டும் உம் கவி பணி♥
வாழ்த்துகள்♦நட்புடன் ஞா.சந்திரன்♥

கருத்துகள்