ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ   ( சென்ரியூ )  கவிஞர்  இரா .இரவி !

தொட்டில் கட்டில் 
மூங்கில் 
வாழ்க்கை !

மருமகள் உடைத்தால் 
பொன்குடம் 
உடையுமா பொன்குடம் !

பசி ஏப்பத்தில் மக்கள் 
புளி ஏப்பத்தில்
அரசியல்வாதிகள் !  

மணலை கயிறாகத் திரிப்பர் 
வானத்தை வில்லாய் வளைப்பர் 
அருகில் தேர்தல்   !

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 
நல்லவனுக்கு தேவையில்லை 
ஆயுதம் !

கறுப்புக் கோழி  
இட்டது 
வெள்ளை  முட்டை !

வெற்றிக்கனி 
ஈட்டிட ஆயுதம் 
முயற்சி !

சாதனைக்கு 
வழி 
விடாமுயற்சி !

குடிகாரனின்     
உயிர் குடித்தது 
மது !

வேகத்தின் குறியீடு 
விரயமில்லா  ஆற்றல்  
கொம்பில்லாக் குதிரை !

என் முதுகு 
எனக்குத் தெரியும் 
கண்ணாடியில் !

நம் உள்ளம் 
நமக்குத் தெரியும் 
நம்மை உணர்ந்தால்  !

கருத்துகள்