ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி !

விலை ஏற ஏற 
ரத்த  அழுத்தம் ஏறியது 
பெட்ரோல் ( எரிபொருள்  )

வாக்குக் கேட்டு வரட்டும் 
வைப்போம் வேட்டு 
சினத்தில் மக்கள் ! 

எங்கும் ஊழல் 
எதிலும் ஊழல் 
மக்களாட்சி !

மாறியது ஆத்திச்சூடி  
படிப்பதை விட 
பிச்சை எடுப்பது மேல் !

வெறுத்தார்கள் தங்கம் 
தமிழ்நாட்டுப் பெண்கள் 
கனவு !

துண்டு விழுந்தது 
திட்டமிட்டதில் 
குடும்பச் செலவு ! 

பெரிய யானையை மிரட்டியது 
சிறிய எறும்பு 
காதில் நுழைந்து !

கருவுருமுன் 
பெயர் வைத்தார்கள் 
பிரதம வேட்பாளர் அறிவிப்பு !

விழி வழி  இன்பம் 
காண்பது சுகம் 
மலரும் மொட்டு !

கூந்தலின் மணம் இயற்கையா ?
செயற்கையா ? இருக்கட்டும் 
செயற்கையாக மனம் !

இடம் பெற்றார் 
வரலாற்றில் அசோகர் 
மரம் நட்டதால் !

சொல்லியது அனுபவம் 
தோலின் சுருக்கம் 
தாத்தா !

குடை இருந்தும் 
பயனில்லை 
பெரு  மழை ! 

வருங்கால சந்ததிகளின் 
வளமான வாழ்வுக்கு 
மழை நீர் சேமிப்பு !

பார்வையற்றோரிடம் 
திருடுபவன்   
கொடூரன் !


-- 

கருத்துகள்