நூல்கள் வெளியீட்டு விழா !
புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .
தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா மோகன் அவர்கள் எழுதிய 100 வது நூல் கவிதைக் களஞ்சியம் , கவிஞர் இரா இரவி எழுதிய 12 வது நூல் ஆயிரம் ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா மதுரை மணியம்மை தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .
புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர்
பி .வரதராசன் விழாவிற்கு தலைமை வகித்தார் .கவிஞர் வ .இராதா வரவேற்றார் .கவிதைக் களஞ்சியம் நூலை மதுரை காமராசர் பல்கலைக் கழக பேராசிரியர் ( முன்னாள் ) சூரிய முர்த்தி வெளியிட ,தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ( முன்னாள் ) இராம .சுந்தரம் பெற்றுக் கொண்டார்.
ஆயிரம் ஹைக்கூ நூலை மருத்துவர் இன்பசேகரன் வெளியிட பொறியாளர் சுரேஷ் பெற்றுக் கொண்டார் .பேராசிரியர் எழுத்தாளர் அருணன் கவிதைக் களஞ்சியம் நூலிற்கு ஆய்வுரை நிகழ்த்தினார் .
தேசியவிருது நல்லாசிரியர் கவிஞர் தங்கம் முர்த்தி ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு ஆய்வுரை நிகழ்த்தினார் .கவிதை உறவு மாத இதழ் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராத கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார் .
நூலாசிரியர்கள் தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா மோகன் , கவிஞர் இரா இரவி இருவரும் ஏற்புரையாற்றினார்கள் .
திரு சு .முத்துக் குமார் நன்றி கூறினார்.
புலவர் வேலாயுதன் , பேராசிரியர்கள் இ.கி .இராமசாமி , ம .பெ .சீனிவாசன் ,நிர்மலா மோகன் , இரவிசங்கர் திருச்சி சந்தர் ,கவிஞர்கள் முரா ,செல்லா , சிதம்பர பாரதி ,லட்சியம் சிதம்பரம் உதவி பேராசிரியர் குருசாமி ,முதுநிலைத் தமிழாசிரியர் கவிஞர்ஞா.சந்திரன், திருப்பரங்குன்றம் கவிஞர்கள்
பொன் விக்ரம் ,சென்றாயன் ,கோபால் பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி சங்கீத் இராதா மற்றும் நூல் ஆசிரியர்களின் நண்பர்கள் ,குடும்பத்தினர் , முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் ,புரட்சிக் கவிஞர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
பொன் விக்ரம் ,சென்றாயன் ,கோபால் பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி சங்கீத் இராதா மற்றும் நூல் ஆசிரியர்களின் நண்பர்கள் ,குடும்பத்தினர் , முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் ,புரட்சிக் கவிஞர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
புரட்சிக் கவிஞர் மன்றத்தின் சார்பில் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக