6 மெழுகு வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

6 மெழுகு  வர்த்திகள் !

நடிப்பு ; ஷாம் ,  பூனம் கௌர்  !

இயக்கம் ;துரை 

இசை ;ஸ்ரீகாந்த் தேவா !

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நடிகர் ஷாம் நல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்தி உள்ள படம் .ராம் என்ற பத்திரமாகவே மாறி உள்ளார் .தாடி வளர்த்து ,கண்களை வீங்க வைத்து தன்னை மிகவும் வருத்தி நடித்து உள்ளார் .இனிவரும் காலம் கதாநாயகியோடு பாட்டுப்பாடி மட்டும் நடித்து வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து . 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .கதாநாயகி பூனம் கௌரும்  நன்றாக நடித்து உள்ளார் .
.
கணினி பொறியாளர் தம்பதிகளின் மகன் கெளதம் .வயது  6.பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி விட்டு  கடற்கரைக்கு   செல்கின்றனர். மகன் கெளதம் தொலைந்து  விடுகிறான் .குழந்தைகளைப்  பிச்சை எடுக்க பயன்படுத்தும்  கும்பல் கடத்தி விடுக்கிறது .கெளதமை தேடி அலைகிறார் ஷாம்.

காவல் நிலையம் செல்கிறார் .பயன் இல்லை .துப்பு கிடைத்து ஆந்திரா செல்கிறார் .அங்கிருந்து கெளதமை வேறிடம் கொண்டு சென்று விட்டார்கள் என்று அறிந்து போபால் செல்கிறார்,மும்பை  செல்கிறார் .கல்கத்தா செல்கிறார் .எப்படியும் மகனை மீட்பது என்ற உறுதியுடன் பயணித்து கடைசியில் மகனை மீட்டு விடுகிறார் .இதுதான் கதை .  

படம் பார்க்கிறோம் என்பதை மறந்து நமது பையன் தொலைந்து விட்டால் என்ன உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு படம் பார்க்கும் அனைவருக்கும்  ஏற்படுகின்றது .இயக்குனர் துரையின் வெற்றி. அவரே படத்தின் பாடல்களும் எழுதி உள்ளார் .இசை ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை மிக நன்று .

கடத்தல் கும்பல் குழந்தைகளை கடத்து விடுகின்றன .மிரட்டி பணம் கேட்கிறார்கள்  .  மனைவி  முலம் ஏற்பாடு  செய்து  .வங்கியில் போடுகிறான் .மகனை மீட்க்கும் நேரத்தில் பெண் குழந்தை அழுது  ஓடி வருகிறது .அந்தக் காட்சியைப் பார்த்து மனம் பொறுக்க  முடியாமல் , அந்தக் கும்பலிடமிருந்து    அந்தப்பெண் குழந்தையை காப்பற்றுகின்றான் .வெளியே கொண்டு சென்று பத்திரிக்கை அலுவலக வாசலில் விட்டு  அங்குபோய் சொல் என்று சொல்லி விட்டு திரும்பி வரும்போது அவர் மகன் கௌதமை வேறு ஊருக்கு கடத்தி கொண்டு செல்கின்றனர் .பணமும் இழந்து விடுகிறார் .மனம் வலிக்கின்றது மனிதாபிமானத்தில் பெண் குழந்தையைக் காப்பாற்ற தன்  குழந்தை கிடைக்காமல்  போகிறது .

கடத்தல் கும்பலுடன்  தனி மனிதனாக சண்டை இடுகின்றார் .மகனைத் தேடி பயணித்து நாள் ஆக ஆக மனைவி கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை .நான் மிகவும் இங்கு சிரமப்படுகிறேன் .நீங்கள் உடன் வாங்க உங்களுக்கு எத்தனை பிள்ளை வேண்டுமானாலும் பெத்துத் தருகிறேன் .என்றபோது நீயா இப்படி பேசுகிறாய் .நான் நம் மகனுடன்தான் வருவேன் என்று சொல்லி தேடி அலைகிறார் .மன உறுதியுடன் தேடி மகனை அடைகிறார் .மிக உருக்கமான நடிப்பு .நல்ல நடிகர் ஷாமை  இது வரை எந்த இயக்குனரும் சரியாகப் பயன்படுத்த வில்லை என்றே சொல்ல வேண்டும் .குழந்தையைப்  பறி கொடுத்தவர்கள்  மனம் படும் பாட்டை திரையில் வடித்துள்ளார் இயக்குனர் துரை .

நடிகர் ஷாம் ராம் என்ற தந்தை பாத்திரமாகவே மாறி தன்  மகன் கௌதமிடம் அன்பு செலுத்தும் காட்சி நெகிழ்ச்சி .தன் மகனுக்கு    நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று நீச்சல் பயற்சியாளரிடம்  கடிந்து கொள்ளும் காட்சி . பாசமாக ,அன்பாக ,செல்லமாக வளர்த்த  மகன் வயது 6 .காணாமல் போனதும் துடித்து விடுகிறார் .வசனம் மிக நன்று .எழுத்தாளர் ஜெய மோகன் எழுதி உள்ளார் .குழந்தைகளைக் கடத்தும் கும்பலின் கன்னத்தில் அறைவதுப் போன்ற வசனங்கள் .

மிக வித்தியாசமான படம் .பார்க்கலாம் .நடிகர் ஷாம் நடிப்பையும் ,இயக்குனர் துரையின்  உழைப்பையும் பாராட்டலாம் .

கருத்துகள்