இன்று 24.9.2013. தி இந்து தமிழ் நாளிதழில் வந்த பொது அறிவுத் தகவல்களை வைத்து எழுதிய புதுக்கவிதை .

இன்று 24.9.2013. தி இந்து தமிழ் நாளிதழில் வந்த பொது அறிவுத் தகவல்களை வைத்து எழுதிய புதுக்கவிதை .   

என்னவளே  !  கவிஞர்   இரா .இரவி !

என்னை எறும்பாக்கியவள்  நீ  !
ஆம் உன்னால் 
தூங்காத  எறும்பு ஆனேன் !
எறும்பு  தூங்குவதில்லை !
உன்னைக் கண்ட நாள் முதலாய் 
நானும் தூங்குவதே   இல்லை  !
எறும்பு ஒய்வது இல்லை 
நானும் ஓயவில்லை !
----------------------------------------------
மரங்கொத்தி பறவை மரத்தை 
ஒரு நொடியில் 20 முறை கொத்தும் !
மனம்  கொத்தி  பறவையான  நீ 
ஒரு நொடியில் 100 முறை கொத்துகின்றாய் !
அலகால்  கொத்தும் பறவை அது !
அழகால் கொத்தும்  பாவை நீ 
--------------------------------------------------
.தலை துண்டிக்கப்பட்டாலும் 
ஒன்பது நாள் உயிர் வாழும் 
கரப்பான் பூச்சி !
நம் உறவு துண்டிக்கப்பட்டால் 
நிமிடத்தில் என் உயிர் பிரியும் !
எந்தன் உயிர் 
உந்தன் உறவில் உள்ளது .
 --------------------------------------------------
ஒரு நத்தையால்  மூன்று 
ஆண்டுகள் தூங்க  முடியும்  !
என்னவளே நீ என்னோடு 
இருந்தால் என்னாலும்  முடியும் !
கவலையின்றி கட்டி அணைத்து 
தூங்கிக்  கொண்டே இருக்கலாம் !
---------------------------------------------------------
மலை வாழ் மைனா 
மனிதர்கள் போல பேசும் !
இல்லம் வாழ் மைனா நீ 
என்னைப் போலப்  பேசு 
நான் பேசியதை அப்படியே 
நீ பேசினால் எப்போதும் 
நமக்குள் வராது ஊடல் !
---------------------------------------------------------
பேசும்  பச்சை கிளிக்கு
நினைவாற்றல் உண்டு  !
பைங்கிளி  உனக்கும் 
நினைவாற்றல் உண்டு  !
அன்று நான் சொன்னதை 
அன்றே மறந்து இருப்பேன் 
அன்று சொன்னதை மறக்காமல் 
என்றும் சொல்லும் நினைவாற்றல்
 மிக்கவள் நீ !
-------------------------------------------------------------
யானையின் உருவம் மட்டுமல்ல 
நினைவாற்றலும் பெரிது !
என்னவளும் யானை மாதிரிதான் 
உருவத்தால் அல்ல !
உள்ளத்தால்  நினைவாற்றலால்     
----------------------------------------------------------
பறக்கும் புறாவிற்கு 
மணம்  தெரியும் !
பாவை என் புறாவிற்கு என் 
மனம் தெரியும் !
--------------------------------------------------------
சிறுத்தை கர்ஜிக்காது ஆனால் 
பலம் மிக்கது !
என்னவளும்  கர்ஜிப்பதில்லை ஆனால் 
பலம் மிக்கவள் !
--------------------------------------------------
நன்றி !  தி இந்து தமிழ் நாளிதழ் 


கருத்துகள்