நிலா தேடும் ஆகாயம் !
நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
செல் 9841436213 விலை ரூபாய் 30.
மு .முருகேஷ் அவர்களின் அணிந்துரை மிக நன்று .பதிப்பாளர் பொதிகை மின்னல் இதழ் ஆசிரியர் ,கவிஞர், இனிய நண்பர் வசீகரன் அவர்களின் பதிப்புரையும் ,அட்டைப்படம் ,அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன ..பாராட்டுக்கள்.
இயந்திரமயமான உலகில் ஊடகங்களின் ஆதிக்கம் காரணமாக நூல் வாசிக்கும் பழக்கமே வழக்கொழிந்து வரும் நிலையில் நீண்ட நெடிய மரபுக் கவிதைகள் படிக்க பலருக்கு நேரமும், பொறுமையும் இருப்பதில்லை . ஆனால் மூன்று வரி முத்தாய்ப்பான ,ரத்தினச் சுருக்கமான ,சுண்டக்காய்ச்சிய பாலாக உள்ள ஹைக்கூ கவிதைகளை எல்லோரும் விரும்பி படிக்கின்றனர் .நூல் முழுவதையும் ஒரே மூச்சில் வாசித்து .விடுகிறோம் .
கரும்பு தின்ன கூலி தேவை இல்லை .இந்த ஹைக்கூ நூல் படிக்க பரிந்துரை தேவை இல்லை .வாங்கிப் படித்து மகிழுங்கள் .
நம்நாட்டில் ஏழைகளுக்கு குடும்ப அட்டை மூலம் அரிசி இலவசமாக வழங்குகிறார்கள் .பல ஏழைகள் இதனால்தான் உணவு உண்கிறார்கள் . ஆனால் ஆள்வோர் காய்கறிகள் உள்பட எல்லாப் பொருட்களின் விலையும் மிக அதிகமாக ஏறி வருவதை தடுப்பதே இல்லை .என்பதை உணர்த்தும் ஹைக்கூ .
கனவு தேசம் இது
அரிசி இலவசம்
பல மடங்கு காய்கறி விலை !
இன்றைய காதலர்களுக்கு பக்குவம் இல்லை .புரிந்து கொள்ளும் தன்மை இல்லை .அடிக்கடி சண்டை இடுகின்றனர் .செல்லிடப்பேசி வருகைக்குப் பின் அடிக்கடிப் பேசி சண்டை இடுகின்றனர் .புரிதலின்றி தற்கொலையும் புரிகின்றனர் .
காதல்
தினம் கொல்லும்
ஊடல்கள் !
..உறவுகளிடம் சொல்ல முடியாத தகவலையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம் .நட்பின் மேன்மை அவசியம் சொல்லும் ஹைக்கூ நன்று .
பழகப்பழக
துளிர்க்கிறது
நட்பு !
மரத்திற்கு மழை வேண்டும் .மனிதன் வாழ மரம் வேண்டும் .மனிதன் உண்ணும் உணவு விளைய தண்ணீர் வேண்டும் .தாகம் தணிக்க தண்ணீர் வேண்டும்.மனிதன் உயிர் வாழ தண்ணீர் வேண்டும்.மூன்று பங்கு தண்ணீரால் சூழ்ந்தது .உலகம் தண்ணீரையும் தலைவியையும் ஒப்பிட்டு ஒரு ஹைக்கூ .
தாவரங்களுக்குத்
தண்ணீர்
எனக்கு அவள் !
எதையும் பேசித் தீர்க்கலாம் .எதற்கும் வன்முறை தீர்வாகாது .எந்த மதமும் வன்முறை கற்பிக்கவில்லை .வன்முறை கற்பித்தால் மதமே அன்று .சிலர் மூளைச் சலவை செய்து மத தீவிரவாதியாக மாற்றி விடுகின்றனர் .அவர்கள் பொதுமக்களுக்கும் உடைமைகளுக்கும் தீங்கு செய்து வருகின்றனர் .அதனை கண்டிக்கும் ஹைக்கூ .
தொடர் குண்டுவெடிப்பு
காஷ்மீர் ஆப்பிள்
உடன் தீப்பொறி !
நம் நாட்டில் கடவுளுக்கு பஞ்சம் இல்லை .ஆனால் .நாட்டில் பஞ்சம் மட்டும் தீர வில்லை .கல்வி நிறுவனங்கள் பகல் கொள்ளை நிறுவனங்களாக மாறி வருகின்றனர் .கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி வருகின்றது .
கல்விக்கடவுள் கோடி
பாவம் கட்டணமின்றி
முதல் வகுப்ப்பு மாணவன் !
நிலா பார்ப்பதற்கு மிகவும் அழகுதான் .கண்டு .ரசிக்கலாம் .பசியோடு இருக்கும் ஏழைக்கு நிலா .இனிப்பதில்லை .அவன் நிலாவை ரசிப்பதில்லை .இயல்பை மிக இயல்பாக பதிவு .செய்துள்ளார் .
பசி படர்ந்தவன்
தேடுவதில்லை
நிலா !
குடை
கனத்த
மழை !
கையில் குடை இருந்தாலும் கனத்த மழை பெய்தால் கடந்து செல்ல முடியாது என்பதைக் காட்சிப் படுத்தி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக