தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரையில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது .

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரையில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது .

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரையில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் திரு .எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார்  . வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார்  

 வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு .திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம் ,ஆ .முத்துக் கிருஷ்ணன் ,G.ராம மூர்த்தி ,C. ராஜேந்திரன் ,சந்துரு ,சரவணன் ,பிரபுராம் ,ஜானகிராமன் வாழ்த்துரை வழங்கினார்கள் .

 பத்மஸ்ரீ T.M. சௌந்தரராஜன் அவர்களின் முதன்மை மாணவரும் ,மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியின் ஒய்வுபெற்ற பேராசிரியருமான திரு .G.R. மஹாதேவன் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் . 
  
 "பத்மஸ்ரீ T.M.சௌந்தரராஜன் அவர்கள் மதுரையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தன்னம்பிக்கையுடன் போராடி புகழின்  உச்சம் தொட்டார் . ஆரம்பகாலத்தில்   அவர்   சந்தித்த அவமானங்கள் பல .பொருட்படுத்தாமல் போராடி வெற்றி பெற்றார் ."அவரது வரலாற்றை எடுத்துக் கூறி அவரது பாடல்களையும் இனிமையாகப் பாடி  தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் . விழாவிற்கு திரு. முத்து  முருகேசப் பாண்டியன் ,திரு.மணிகண்டன் உள்ளிட்ட வாசகர் வட்டத்தினர் பலர் வருகை தந்து சிறப்பித்தனர் .திரு தினேஷ் நன்றி சொல்ல விழா இனிதே நிறைவு  பெற்றது  .புகைப்படக் கலைஞர் கார்த்திகேயன்  கை வண்ணத்தில்  

கருத்துகள்