விருதுநகர் வே .வ .வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை வெளியிட்டுள்ள செய்யுட்பகுதி நூலில் இடம் பெற்றுள்ள ஹைக்கூ கவிதைகள் .


விருதுநகர் வே .வ .வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை வெளியிட்டுள்ள செய்யுட்பகுதி நூலில் இடம் பெற்றுள்ள ஹைக்கூ கவிதைகள் . 
 
நெருப்புதான் பெண் 
அம்மாவிற்கு அடிவயிற்றில் 
மாமியாருக்கு அடுப்படியில் !        கவிஞர் அறிவுமதி !

நடுப்பகல் 
சுடுமணல் 
பாவம் .. என் சுவடுகள் !                  கவிஞர் அறிவுமதி !

.
குளம் 
முகம்  பார்க்கும் நிலா 
குளிக்காமல்  திரும்பினேன் !         கவிஞர் மித்ரா !


மழை  நின்ற பிறகு 
காற்று எழுதியது 
சாரல் கவிதைகள் !                         கவிஞர் மித்ரா !எத்தனை  முறை தோற்றாலும் 
முயற்சிகள் தொடரும் 
கரை தொடும் அலைகள் !              கவிஞர்  அமுதபாரதி !

அந்தக் காட்டில் 
எந்த மூங்கில் 
புல்லாங்குழல் !                                 கவிஞர்  அமுதபாரதி !இருட்டில் நடக்க 
சரியான துணை தான் 
ஒற்றை நிலா !                                 கவிஞர் மு .முருகேஷ் !

வயற்காட்டுப் பொம்மை 
நிமிர்ந்தே நிற்கும் 
கூன்  விழுந்த உழவன் !                கவிஞர் மு .முருகேஷ் !


உடல் ஊனம் 
தகர்த்துவிடும்  
தன்னம்பிக்கை !                             கவிஞர்  இரா .இரவி !

இரவு பகலென  
வறட்சி வெள்ளம் 
விவசாயி வாழ்க்கை !                   கவிஞர்  இரா .இரவி !
கருத்துகள்