இனிய நண்பர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை அவர்கள் வெளியீட்டு விழா !

இனிய நண்பர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை அவர்கள் வெளியீட்டு விழா !

 இனிய நண்பர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை அவர்கள் எழுதிய"  தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் சங்க காலம் முதல் சுமங்கலி திட்டம் வரை" நூல்   வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது சென்று வந்தேன் .நீதி அரசர் சிவராஜ்  வி .பாட்டீல் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் .சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் , வழக்கறிஞர் செல்வ  கோமதி அவர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வரவேற்றார் .

" இந்த நூல்   ஆய்வு  நூல்  ,ஆவண  நூல் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும் .  கன்னட  மொழியில் மொழி பெயர்க்க நான் முயற்சி செய்கிறேன்  .25 நூல்களை    விலைக்கு வாங்கி நண்பர்களுக்கு தர உள்ளேன் . இந்த      நூல் எல்லா நூலங்களிலும் இடம் பெற வேண்டும் .பஞ்சாயத்து அலுவலங்களிலும் இந்த நூல் இருக்க வேண்டும் , கொத்தடிமை நாட்டில் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் . லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் நேர்மையையும் பாராட்டிப் பேசினார் .நேரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்து வேண்டும் என்றார் .சோக்கோ அறக்கட்டளையின் சார்பில் நூல் வெளியிடப்பட்டது .நீதிபதிகளும் ,வழக்கறிஞர்களும்  , மாணவர்களும் ,பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர் . நூல் ஆசிரியர் திரு .ப .திருமலை அவர்கள் ஏற்புரையாற்றினார் .

கருத்துகள்

  1. நூல் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் திரு .ப .திருமலை

    இணை ஆசிரியர் வழக்கறிஞர் செல்வ கோமதி.சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் ,

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக