சென்னை எக்ஸ்பிரஸ் திரைபடத்தின் ஏமாற்று வேலை ! கவிஞர் இரா .இரவி !
சென்னை எக்ஸ்பிரஸ் திரைபடத்தின் சுவரொட்டியில் சென்னை எக்ஸ்பிரஸ் என்று தமிழில்இருப்பதாலும் திரு .சத்யராஜ் இருப்பதாலும் தமிழ்ப்படம் என்று நினைத்துச் சென்ற அனைவருக்கும் ஏமாற்றம் .தமிழில் மொழி மாற்றம் செய்யாமல் இந்தியில் உள்ளது .கதைப்படி ஒரு சில தமிழ்ச்சொல் பயன்படுத்தி உள்ளனர் .அவர்கள் இந்தியில் பேசப் பேச இந்தப்படத்திற்கு ஏன் வந்தோம் ? என்று எரிச்சல் வருகிறது .கதைப்படி தமிழர்களை அடியாளாக காட்டி கிண்டல் செய்து உள்ளனர் ..தமிழில் மொழி மாற்றம் செய்யாமல் வெளியிட்டால் தமிழர்கள் விரும்ப மாற்றார்கள் என்பதற்கு எடுதுக்காட்டாகி விட்டது .
ஆங்கிலப்ப்படங்களான ஜாக்கிசான் படங்கள் கூட தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரும் காலத்தில் .இந்தியில் வெளியிட்டு ஏமாற்றி உள்ளனர் . தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு இருந்தால் படமும் வெற்றி பெற்று இருக்கும் .மறைமுகமாக இந்தி புகுத்தும் வேலை இது .இதனால் நஷ்டம் அவர்களுக்குதான் .சுவரொட்டிகளிலும் திரையரங்குகளிலும் இந்திப்படம் என்று எங்கும் எழுதவே இல்லை இந்தி எழுத்தும் இல்லை .இது ஏமாற்று வேலை . இந்திப்படத்தை தமிழ்ப் படம் போல வெளியிட்டு இருப்பது .
கருத்துகள்
கருத்துரையிடுக