காவியக் கவிஞர் வாலியே ! கவிஞர் இரா .இரவி !
காவியக் கவிஞர் வாலியே !
மாலுமி இழந்த கப்பல் போல நாங்கள்
மட்டற்ற கவிஞரை இழந்து தவிக்கிறோம் !
வாலிப வாலி என்பது உண்மை !
வாலிபக்கவியை எண்பது கடந்தும் எழுதியவர் !
புதியவானம் புதிய பூமி என்று எழுதி !
புத்துணர்வை விதைத்தவர் வாலி !
'ஏமாற்றாதே ! ஏமாறாதே !என்று எழுதி !
எமக்கு மனிதநேயம் கற்பித்த வாலி !
கண் போன போக்கிலே கால் போகலாமா ?
காளையரை நெறிப் படுத்திய வாலி !
தரை மேல் பிறக்க வைத்தான் என்று எழுதி !
துயரில் வாடும் மீனவர்களின் கண்ணீர் பாடிய வாலி !
காற்று வாங்கப் போனேன் கவிதை வாங்கி வந்தேன் !
காற்றில் பாட்டில் கலந்து என்றும் நின்ற வாலி !
அக்கிரகாரத்தில் பிறந்த அதிசய மனிதர் வாலி !
அய்யா பெரியார் பற்றியும் கவி வடித்த வாலி !
கருத்துகள்
கருத்துரையிடுக