'குழந்தைகளைத் தேடும் கடவுள் ' நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
'குழந்தைகளைத் தேடும் கடவுள் '
நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் 8790231240
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு .சேலம் .636015.
உயிரூட்டிய பெற்றோருக்கும் .அறிவூட்டிய ஆசிரியர்களுக்கும் இந்த நூலை காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு .பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை ,அட்டைப்பட வடிவமைப்பு அச்சு ,உள் ஓவியங்கள் யாவும் மிக நேர்த்தி வாசகன் பதிப்பகத்தின் பெருமை மிக வெளியீடாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் ஹைக்கூ ஆய்வுக் கவிஞர் மு .முருகேஷ் ,பேராசிரியர் முனைவர் மித்ரா இருவரின் அணிந்துரையும் மிக நன்று .
'குழந்தைகளைத் தேடும் கடவுள் 'என்பதை விட 'கடவுளைத் தேடும் குழந்தைகள் 'என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும் .குழந்தைகளிடம் கடவுளை வணங்கு என்று நாம் கற்பிக்கும்போது குழந்தைகள்தான் கடவுள் எங்கே என்று தேடுகின்றன .
நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு இந்த நூல் இரண்டாவது நூல் .சிறப்பான ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நூல் இது.என்பதில் இரண்டாவது கருத்து இருக்காது. தொலைக்காட்சி தொல்லைக்காட்சியா கி விட்ட காரணத்தால் பார்ப்பதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறேன் .எப்போதாவது பார்த்தால் விஜய் தொலைக்காட்சியில் திரு ,கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா ? நானா ? நிகழ்ச்சி மட்டும் பார்ப்பதுண்டு .காரணம் .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக விவாதித்து வருகிறார் .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களும் நீயா ? நானா ?திரு ,கோபிநாத் போல எதிர் காலத்தில் புகழ் பெறுவார் .அந்த அளவிற்கு விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .
.அடுத்த வீட்டில் வசிப்பது யார் என்று தெரியாமலே அடுக்ககங்களில் வாழ்ந்து வருகின்றனர் .பழங்கால நேசம் ,பரிவு ,அன்பு ,மனித நேயம் இன்று இல்லை .அடுக்ககங்களின் அவலம் சுட்டும் ஹைக்கூ .
தோப்பு
தனிமரமானது
அடுக்கக வாழ்க்கை !
ஓவியம் வரைதல் ,இசை இசைத்தல் ,பாடல் பாடுதல் ,மேடையில் பேசுதல் இப்படி பல்வேறு திறமைகள் இருந்தாலும் திருமனதிற்குப் பின் ' இல்லத்தரசிகள் 'என்ற பெயரில் பெண்களின் திறமை முழுவதும் வீணடித்து விடும் அவலம் உணர்த்தும் ஹைக்கூ .
அடிப்படிகளில்
பொசுக்கப்படுகின்றன
பெண்களின் திறமைகள் !
காதலை எழுதாத கவிஞன் இல்லை .காதலை எழுதாதவன் கவிஞன் இல்லை ..காதலை ஊறுகாய் அளவிற்கு கொஞ்சமாய் எழுதுவது நன்று .நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்கள் காதலைகொஞ்சமாய் எழுதியது சிறப்பு .
நம்மை அறிந்தே
நாம் தொலையும்
காதல் !
தொலைக்காட்சியைக் கண்டுபிடித் தவர் இருந்தால் உண்மையில் வருந்துவார் .அறிவியல் கண்டுபிடிப்பில் மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசும் விதமாக தொலைக்காட்சியில் சோதிட நிகழ்சிகள் . எந்த வண்ணத்தில் சட்டை போட வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் நமது சட்டை வண்ணத்தை சோதிடர் சொல்வார் .என்ன கொடுமை இது .இந்த அவலத்தைக் கண்டிக்கும் ஹைக்கூ .
தொலைக்காட்சியில் சோதிடம்
அறிவியல் விதைக்கும்
மூட நம்பிக்கை!
தொண்டை நெறிக்கும்
நெகிழிப் பைகள்
அழியத் தொடங்கின விலங்குகள் !
சுவரெங்கும்
கிறுக்கல்கள்
குழந்தைகளின் வீடு !
நம் நாட்டில் ஏவுகணைங்கள் ஏவுகின்றனர் .விரைவில் வல்லரசு ஆகப் போகிறோம் என்று மார் தட்டிக் கொள்கிறோம் .ஆனால் ஏழைகளின் வறுமை மட்டும் இன்னும் ஒழியவே இல்லை .அரசியல்வாதிகள் அவர் வறுமை அவர் மக்கள் வறுமை ஒழித்து வளமாகி பெரும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் .மக்களின் வறுமை மட்டும் அப்படியே தொடர்கின்றது .பலரின் வாழ்க்கை
வீடு .
பாதசாரிகளே கவனம்
சாலையோரம்
வீடுகள் !
உலகில் உள்ள எல்லாக் கவிஞர்களின் பாடு பொருள் நிலா என்பது உண்மை .இவரும் நிலாவைப் பாடி உள்ளார்.
அதிகம் பாடப்பட்டும்
அழகு குன்றவில்லை
நிலா !
நிலவிற்கு அழகு குன்றவில்லை . கூடிக் கொண்டேதான் போகின்றது .
தந்தை பெரியார் இறுதி மூச்சு உள்ளவரை நம் நாட்டில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிக்க போராடினார் .
ஆனால் இன்னும் மூட நம்பிக்கை .ஒழியவில்லை கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிப் பழக்கம் தொடர்வது வேதனை .
சாலையெங்கும் சிதறின
எலுமிச்சைகளின் வடிவில்
மூட நம்பிக்கைகள் !
இன்றைய திரைப்படப் பாடல்கள் கொச்சையாகவும் பச்சையாகவும் ஆங்கிலச் சொற்கள் கலந்தும் வருகின்றன .இதன் பொருள் தெரியாமலே குழந்தைகள் மனப்பாடம் செய்து விடுகின்றனர் .
முக்கியத்துவம் இழந்தது
மனப்பாடச் செய்யுள்
திரைப்பாடல் !
சமுதாயதிற்கு நன்மை பயக்கும் விதமாக விழிப்புணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளார் ..நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக