ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ( சென்ரியூ   ) கவிஞர் இரா .இரவி !


வடித்து கண்ணீர் 
கோடாரி பட்டதும் 
மரம் !

நன்மை பயக்கும் 
மேகங்களின் மோதல் 
இடி மின்னல் மழை !

வசமாகியது உள்ளத்தை 
ஈர்த்தது கவனம் 
வண்ணத்துப்  பூச்சி !

உண்மை 
ஒன்று நூறாகும் 
விதை நெல் !

பார்வைக்கும் 
சுவாசத்திற்கும் விருந்து 
மல்லிகை !

இதழ்களை விட விழிகளே
அதிகம் பேசுகின்றன 
காதலர்கள் !

இருளில் 
ஒளி  வந்தது 
எண்ணம் !

வாய்ப்பு வழங்கியும் 
திருந்த மறுக்கும் 
அரசியல்வாதிகள்  !

சுமையாய் நினைத்தால் 
பறக்க முடியாது 
சிருகுகள் !

இமைகள் மூடியும் 
வரவில்லை தூக்கம் 
அவள் நினைவு !  
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்