தமிழ்நாடுஅரசு தமிழ் வளர்ச்சித் துறையின் கலைப்போட்டிகள் !
மதுரை மாவட்ட கல்வி அலுவலரும் ,மேலூர் மாவட்ட கல்வி அலுவலரும் போட்டிகளைத் தொடங்கி வைத்தார்கள் .
கவிதைப்போட்டிக்கு தேமதுரத் தமிழோசை ஆசிரியர் தமிழாலயன் ,மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ,உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர் .
பேச்சுப்போட்டிக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் க .தர்மராஜ் ,தொல்லியல்த்துறை உதவி இயக்குனர் கணேசன் ,கவிஞர் வைத்தியலிங்கம் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர் .
கட்டுரைப்போட்டிக்கு தமிழாசிரியர்கள் பொன் .சந்திர சேகரன் ,சண்முக திருக்குமரன் ,புலவர் சங்கரலிங்கம் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர் .
ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூபாய் 10000.இரண்டாம் பரிசு ரூபாய் 7000.
போட்டியில் வென்ற மாணவ மாணவியருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் எல் .சுப்பிரமணியன் அவர்கள் பரிசுத் தொகையை வழங்கிப் பாராட்டினார்கள் .மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன் ,கவிஞர் இரா .இரவி கலந்துக் கொண்டனர் .பரிசு பெற்ற மாணவ மாணவியரின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
கவிதைப் போட்டியில் மகப்பூப்பாளையம் அரசுப் பள்ளி மாணவி க .மீனாட்சி முதல்பரிசு ரூபாய் 10000 பெற்றார் .போட்டிகளில் முதல் பரிசு வென்றவர்கள் சென்னையில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிக்கு பரிந்துரைக் பட்டனர் .விழாவிற்கான ஏற்பாட்டை தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் முனைவர் க .பசும்பொன்
மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தார்கள் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக