வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வண்டாடப்  பூ மலர !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கவிதா வெளியீடு ,த .பெ .எண் 6123. , 8. மாசிலாமணி தெரு ,பாண்டி பஜார் .தியாகராயர் நகர் ,சென்னை .17. தொலைபேசி 044 - 24364243.
விலை ரூபாய் 125.

வீரம் மிக்க மண்ணான சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றான நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன்  அவர்களின் பெருமை மிகு படைப்பாக வந்துள்ள நூல் .

தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு மிக்கவர் .குறிப்பாக வைணவ பக்தி இலக்கியத்தில் ஆழ்ந்து புலமை மிக்கவர் .இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று  இருந்தேன் .இந்த நூலை வெளியிட்ட கலைமாமணி கு ஞானசம்பந்தன்  அவர்கள் தனக்கு இலக்கியத்தில் ஏதாவது ஐயம் வந்தால் நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன் .என்றார்கள் .நூலைப் பெற்றுக் கொண்ட அருட்ச்செல்வர் சங்கர சீத்தாராமன்  அவர்களும் நூலைப் பற்றி ஆய்வுரை மிகச் சிறப்பாக  நிகழ்த்தினார் .நன்றியுரையில் நூல் ஆசிரியர்  ம .பெ .சீனிவாசன் அவர்கள விழாவிற்கு அழைத்ததும் வர சம்மதித்த கலைமாமணி கு ஞானசம்பந்தன்  அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார் .

இந்த நூலை நூல்  ஆசிரியர் அவரது  அன்னைக்கு காணிக்கை ஆக்கியுள்ளார் . பல நூல்கள் எழுதி இருந்தாலும் எல்லா நூலுக்கும் வெளியீட்டு விழா வைப்பது .இல்லை முன்பு தாத்தாவிற்கு காணிக்கை ஆக்கி நூலிற்கு வெளியீட்டு விழா வைத்தேன் .இந்த நூலை அன்னைக்கு காணிக்கை ஆக்கி இருப்பதால் அன்னை பற்றி பேசிட வெளியீட்டு விழாவிற்கு சம்மதித்தேன் .இந்த விழா சீரும் சிறப்புமாக நடக்க புரட்சிக் கவிஞர்  மன்றத்தின் தலைவர் பி .வரதராசனே காரணம் என்று குறிப்பிட்டார் .
.
ஆய்வு நோக்கிலும் , இரசனைப் போக்கிலும்  அமைந்த  சிறு கட்டுரைகளின் தொகுப்பு நூல்  இது . 50 கட்டுரைகள் உள்ளன .கட்டுரைகள் சிறிதாக இருப்பதால் படிக்க சுவையாக உள்ளன .நீண்ட நெடிய கட்டுரைகள் நூலில் இல்லை என்பது தனிச் சிறப்பு .


கட்டுரைகளில் திருக்குறள் ,குறுந்தொகை ,நற்றிணை ,அக நானூறு ,புற  நானூறு , திருச்சதகம் ,நாலாயிரம் திவ்யப்பிரபந்தம் ,இப்படி சங்க இலக்கியங்கள் மட்டுமன்றி மகாகவி பாரதியார் .புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் , கனவுகள் = கற்பனைகள் = காகிதங்கள் நூல் புகழ் கவிஞர் சிவகங்கை மீரா ,உவமைக் கவிஞர் சுரதா , கலா ரசிகன் கவிதைகள் வரை மேற்கோள் காட்டி கட்டுரைகளைத் திறம்பட வடித்துள்ளார்கள் .இதில் 2 கட்டுரைகள் தினமணி நாளிதழில் வந்தவை .நூல் பழமையும், புதுமையும் கலந்த கலவையாக உள்ளது .

வண்டாடப்  பூ மலர ! நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது .இந்த தலைப்பு நூல் ஆசிரியரின் அன்னை தாலாட்டின்  போது  தலைப்பு .
வண்டாடப்  பூ மலர !  என்ற முதல் கட்டுரையில் .

வண்டாடப்  பூ மலர  என் கண்ணே ! உன்னை 
வையத்தார் கொண்டாட !
செண்டாடப்  பூ மலர  என் கண்ணே !உன்னைத்  
தேசத்தார் கொண்டாட !

தாலாட்டுப் பாடல் குறிப்பிட்டு வண்டு என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் எங்கும் எல்லாம் வருகின்றது என்று ஆய்வு நடத்தி பாடல்களை எழுதி உள்ளார் .விளக்கம் தந்துள்ளார் .

ஐம்பால்  என்பது மகளிர் கூந்தலையும் ஐம்பாலார்  என்பது மகளிரையும் குறிப்பதைச் சங்க நூல்களில் உள்ளனவற்றை மேற்கோள் காட்டிய கட்டுரை மிக நன்று .

பட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம் ,மணிமேகலை ,மணிவாசகம் கம்ப இராமாயணம்  ,போன்ற இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள தகவலை பாடல்களுடன் விளக்கி உள்ளார்கள் .

இவரது ஒரு கட்டுரை என்பது பத்து  நூல்கள் படித்ததற்குச்  சமம் .இந்த நூலில் 50 கட்டுரைகள் உள்ளன .எனவே 500 நூல்கள் படித்ததற்குச்  சமம் .தமிழ் இலக்கியத்தின் மேன்மையை சிறப்பை நன்கு உணர்த்தி உள்ளார்கள் .படிக்க மிக எளிமையாகவும் ,இனிமையாகவும்  உள்ளது .நல்ல நடை .பாராட்டுக்கள் .

ஈன்றபொழுதில்  என்ற கட்டுரையில் திருக்குறள் ,நாலாயிரம் ,கம்ப இராமாயணம் மேற்கோள் காட்டி ஞான  பீட விருது பெற்ற எழுத்தளார் ஜெயகாந்தன் அவர்களின் வைர வரிகளையும் மேற்கோள் காட்டி உள்ளார் .

காதல் அடைதல் உயிர் இயற்கை கட்டுரையில் பாட்டுக் கோட்டையான பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் அற்புத வரிகள் உள்ளன .

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும் 
அன்பு மணக்கும் தேன்சுவைப்பாட்டும் 
அமுத விருந்தும் மறந்துபோனால் 
உலகம் வாழ்வதும் ஏது ? பின் 
உயிர்கள் மகிழ்வதும்  ஏது ? 

மீண்டார் என உவந்தேன் என்ற கட்டுரையில் பேராண்மை என்றால் என்ன என்ற விளக்கம் மிக நன்று .

நிலம் = நீர் = உணவும் நூல் ஆசிரியரின் முந்தைய நூலை வெளியிட்ட  கவிஞர் மீரா அவர்களின் பாதிப்பு இருப்பதால் அவர் போலவே தலைப்பும் இட்டுள்ளார் .

உண்டி கொடுத்தோர்  உயிர் கொடுத் தோரே  
உண்டி முதற்றே உணவின் பிண்டம் ! (  புற  நானூறு  18)

இந்தக்கட்டுரையின் முடிப்பு மிக நன்று .சமுதாயத்திற்கு செய்தி சொல்வதுபோல உள்ளது .

ஏரியை நீர்  நிலைகளையும் அவற்றின் வரதுக் கால்வாய்களையும் தொலைத்து விட்டுச்  சொட்டு நீர்ப் பாசனத்திற்குத் திட்டம் தீட்டுகிறோம் .
நம்மினும் பேதையார் யார் ?
என்ற கேள்வியோடு கட்டுரை முடிகின்றது .

பல்லி  சொல்லும் பலன் ?
கலித்தொகையில் நற்றிணையில் பல்லி பற்றி வரும் பாடல்கள் மேற்கோள் காட்டி விளக்கி  உள்ளார் .
உடைந்த பல்லி முட்டையைப்    பார்த்து  அதனைப் புன்னை பூவுக்கு உவமை கூறிய புலவரையும் தமிழ் இலக்கியம் காட்டுகிறது என்ற தகவலையும் நூலில் பதிவு செய்துள்ளார் .

இந்த நூல் 50 கட்டுரைகள் உள்ளன .பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .நூலில் மேற்கோளாக வரும் கவிஞர் மு .அண்ணா மலை அவர்களின் கவிதை மிக நன்று .
இராமாயணம் ,மகாபாரதம் ,திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களின் விருந்தாக உள்ளது நூல் .கட்டுரையின் தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன .

.தீங்குழல்  கேளாமோ  தோழி ,எமலோகம்  வரை லஞ்சம் ,தளரடி தாங்கும் நெஞ்சம் ,மாலை சூட்டிய   மாலை ,கொல்லிப்பாவை ,ஐ ,வல்லவனுக்கு புல்லும் இப்படி தலைப்பைப் படிக்கும் போதே கட்டுரையைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் துண்டும் வண்ணம் உள்ளது .

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .இளைய தலைமுறையினருக்கு சங்க இலக்கியத்தை எளிமையாக கொண்டு சேர்க்க உங்களைப் போன்ற தமிழ் அறிஞர்களால் மட்டுமே முடியும் .தொடர்க .


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்