சில்லறை வணிகத்தில்அந்நிய முதலீடு ! கவிஞர் இரா .இரவி !
வாசல் வழியாக வெளியே சென்ற வெள்ளையன் !
வருகிறான் கொல்லைபுறம் வழியாக கொளையடிக்க !
வெள்ளையனே வெளியேறு ! அன்று கோசமிட்டனர் !
வெள்ளையனே வருக ! வருக ! என்கிறது தேசம் !
புதியபொருளாதாரம் என்ற பெயரில் நம்மை !
பாதாளத்தில் தள்ளிட வருகிறான் வெள்ளையன் !
உலகமயம் என்ற பெயரில் உலக மக்களின் !
உயிர் வதைக்க வருகிறான் வெள்ளையன் !
தாராளமயம் என்ற பெயரில் பொருளாதாரத்தை !
தவிடு பொடியாக்க வருகிறான் வெள்ளையன் !
வர்த்தகம் என்ற பெயரில் நமது நாட்டின் !
வளங்களை சிதைத்திட வருகிறான் வெள்ளையன் !
வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் !
வால் முளைக்காத குரங்கு வர உள்ளது !
குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக !
குமுகாயம் சிதைக்க வருகிறான் வெள்ளையன் !
பன்னாட்டு முதலாளிகள் அல்ல அவர்கள் !
பன்னாட்டு முதலைகள் அவர்கள் எச்சரிக்கை !
கண்களை விற்று ஓவியம் வாங்கலாமா ?
களவாணிகளை விட்டு வேடிக்கைப் பார்க்கலாமா ?
அபகரிக்க வருகிறான் மிகவும் ஆபத்தானவன் !
அனைவரும் சேர்ந்து நின்று எதிர்த்திடுவோம் !
.
அன்று வணிகம் என்றதான் வந்தான் வெள்ளையன் !
அடிமைப்படுத்தி ஆளத்தொடங்கி ஆணவம் பெற்றான் !
இன்றும் வணிகம் என்ற பெயரில் வருகிறான் !
இழித்தவாயராக இருந்தால் ஆளத்தொடங்கிடுவான் !
தூங்குபவர்களை தட்டி எழுப்பி விடலாம் !
தூங்குவது போல நடிப்பவர்ககளை எழுப்ப முடியாது !
பலகோடிகள் அரசியல்வாதிக்கு லஞ்சம் தந்து வருகிறான் !
பல் இளித்து கொள்ளையனை வரவேற்கின்றனர் !
நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்து !
நித்தம் பாட்டிலில் அடைத்து விற்றுக் கொள்ளை !
அடிக்கின்ற கொள்ளைகள் போதாதென்று !
அடிக்க வருகிறான் சில்லறை வணிகம் என்று !
சில்லறை வணிகம் என்ற பெயரில் நாட்டில்
மொத்தக் கொள்ளை அடித்திட வருகிறான் !
புதியவை என்ற பெயரில் குழியில் நம்மை !
புதைத்து அழித்திட வருகிறான் வெள்ளையன் !
தூய்மை என்று சொல்லி ஏமாற்றி !
துயரம் தந்திட வருகிறான் வெள்ளையன் !
நாகரிகம் என்று சொல்லி நாட்டில் !
நம்மை சீரழிக்க வருகிறான் வெள்ளையன் !
நோய் தரும் பொருள்களை விற்று !
நோய்நீக்கும் மருந்து விற்க வருகிறான் வெள்ளையன் !
சின்னப்புத்திக் காரர்களின் சின்னத்தனம் !
சில்லறை வணிகத்தில்அந்நிய அனுமதி !
உலக நாடுகளில் விரட்டியடிக்கப்பட்டவன் !
ஒதுங்க வருகிறான் விரட்டிடுவோம் வாருங்கள் !
உஷார் அய்யா !உஷாரு ! அட்டைப் பூச்சியாக !
உறிஞ்சிக் குடிப்பான் உஷார் !அய்யா உஷாரு !
நடிகன் நடிகை அந்தரங்கம் அலசிஆராயும் !
நம் நாட்டு ஊடங்கங்கள் திருந்த வேண்டும் !
என்று திருந்தும் எமது நாடு !
ஏழை எளியவர்களின் விடியலை நாடு !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக