சிறகு முளைத்த பூக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் !செல் 9965039935.
நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
ஓவியா பதிப்பகம் .17-16-5எ .கே .கே .நகர் .வத்தலக்குண்டு .642202.
செல் 7667557114.
இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரை நன்று .அட்டைப்படங்கள், உள் ஓவியங்கள், அச்சு அனைத்தும் மிக நன்று .பாராட்டுக்கள் .வளரும் கவிஞர்களைத் தட்டிக் கொடுத்து வளர்த்து விடும் தாயுள்ளம் கொண்ட தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மணிமகுடமாக உள்ளது .ஓவியக் கவிஞர் ஸ்ரீரசா அவர்களின் அணிந்துரையும் நன்று .முனைவர் ச .சரவண ஜோதி வாழ்த்துக் கவிதை நன்று .ஆசிரியர் கவிஞர் கவிவாணன் சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி . ஓய்வறியா உழைப்பாளி . கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களின் பெயரை மறக்காமல்எழுதி நன்றியைப் பதிவு செய்தது சிறப்பு .இந்த நூலினை அவரது அன்னை அ.அசரபுன்னிசா அவர்களுக்கும் ஹைக்கூ ஆய்வாளர் கவிஞர் அமரன் அவர்களுக்கும் காணிக்கை ஆக்கி உள்ளார் .
.
இலக்கியத்தில் இனிமையானது கவிதை .கவிதைகளில் பரவலாக பலரால் விரும்பப்படும் வடிவம் ஹைக்கூ .ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதையை குறை சொன்னவர்களும் ஹைக்கூ வளர்ச்சி எழுச்சி கண்டு பிரமித்து விட்டனர் .1997 முதல் இன்று வரை எழுதிய ஹைக்கூ கவிதைகள் ,ஹைக்கூ அந்தாதி ,ஹைபுன் கவிதைகளின் தொகுப்பு இந்த நூல் .சிறகு முளைத்த பூக்கள் ! நூலில் தலைப்பே கவித்துவமாக உள்ளது .வித்தியாசமாக உள்ளது .பூக்களை ஒட்டி உள்ள இலைகளை சிறகுகளாகப் பார்க்கும் கவி மனம் நன்று .பாராட்டுக்கள் . நூலைப் படிக்கும் வாசகனுக்கும் சிந்தனை சிறகு முளைக்கும் விதமாக ஹைக்கூ உள்ளன .சிந்திக்க வைக்கின்றன .சிற்பி சிலை வடிக்கும் நுட்பத்துடன் ஹைக்கூ வடித்துள்ளார் .இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் வேலை கிடைக்காது வருந்தும் இளைஞன் வேதனையை மிக நுட்பமாக வடித்துள்ளார் .

கரும்பும் வேம்பும் ஒன்று
கற்றவனுக்கு
வேலை தராத அரசு !
மொட்டுகளைக் கருக்கும் விதமாக பிஞ்சுக் குழந்தைகளுக்கு புத்தகம் என்ற பெயரில் பொதி சுமக்க வைக்கும் அவலத்தை சாடும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .
சிலுவை சுமந்த எசுவாய்
குனிதே
பள்ளி செல்லும் பையன் !
இயேசு கூட உயிர்த்து எழுத்தாகச் சொல்வார்கள் .வாடிடும் குழந்தைகள் மீண்டிட வழியே இல்லையா எண்டு சிந்திக்க வைக்கின்றது .
கவிதை எழுதும் படைப்பாளியின் வறுமையைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .
தபால் செலவில் தடுக்கி
அலமாரி இடுக்கில் விழுந்தது
மீண்டும் மீண்டும் கவிதை !
கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனையும் கவிதைக்கு அழகு என்பதை உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .
தவறி விழுந்த
நட்சத்திரங்களா ?
இருள் பள்ளத்தில் மின்மினிகள் !
கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் மோதிக் கொள்ளும் ,மோதிக் கொல்லும் அவலத்தை ,பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வன்முறை விதைக்கும் மூடத்தனத்தை சாடும் விதமான ஹைக்கூ நன்று .
அன்பு வழி மதம்
கடவுள் சிலையில்
மனித இரத்தம் !
குஜராத்தில் நடந்த வன்முறையை கலவரத்தை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது .அதனை நினைவூட்டும் விதமாக உள்ள ஹைக்கூ ஒன்று .
தீபகற்ப இந்தியாவில்
கர்ப்பிணி வயிற்றில் தீ
குஜராத் !
.காதலர்களின் மனதை படம் பிடித்துக் காட்டும் விதமாக ஹைக்கூ .
நிறையப் பேச
நினைக்கிறது மனசு
பிரிவின் கணத்தில் !
அன்று வெள்ளையனே வெளியேறு என்றோம் .இன்று வெள்ளையனே வருக கொளையடிக்க வருக என்று ரத்தினக் கம்பளம் விரிக்கின்றனர் அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கும் வண்ணம் உள்ள ஹைக்கூ .
சில்லறை வணிகம்
அன்னிய முதலீடு
சில்லறையான அரசு !
காதலியைப் பற்றி ஒரு கவிஞனால் எழுதாமல் இருக்க முடியாது .
தாஜ்மகால்
அழகுதான்
உன்னை விடவா ?
காட்சிப்படுத்தும் நுட்பம் உணர்ந்து வடித்த ஹைக்கூ மிக நன்று .
புல்லாங்குழலில்
வண்ணத்துப் பூச்சி
இசைக்குமோ ?
ஹைபுன் கவிதைகள் ,ஹைக்கூ அந்தாதி புதிய முயற்சி பாராட்டுக்கள் .நூல் விமர்சனத்தில் நூலில் உள்ள அனைத்தையும் குறிப்பிட முடியாது என்பதால் இத்துடன் முடிக்கிறேன் .மற்றவை வெள்ளித் திரையில் காண்க என்பதைப் போன்று மற்றவை நூல் வாங்கிப் படித்துக் காண்க !நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன்அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக