வா ... வியாபாரி ஆகலாம் !
நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
அமுதா பதிப்பகம் A- 82.அண்ணா நகர் ,சென்னை .600102.
தொலைபேசி 044- 26261601. விலை ரூபாய் 50.
நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு வியாபாரி , தொழில் அதிபர் மட்டுமல்ல இலக்கிய ஆர்வலர் ,படைப்பாளி என்பதால் வாழ்க்கையில் கண்டு உணர்ந்த வென்ற அனுபத்தை நூலாக்கி உள்ளார்கள் பாராட்டுக்கள் .இவர் சிற்றிதழ்களின் செல்லப்பிள்ளை .இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் படித்து இருக்கிறேன் .பணமும் ,மனமும் , குணமும் உடையவர் .பல சிற்றிதழ்களின் போட்டிகளுக்கு பரிசுத் தொகையை வழங்கி வரும் வள்ளல் .சென்னையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளும் இனியவர் .சென்னையில் நடந்த ஒரு இலக்கிய விழாவில்தான் இவரை சந்தித்தேன் .படைப்பாளி என்பதையும் தாண்டி நல்ல பண்பாளர் .பல நூல்கள் எழுதி உள்ளார் .இவரது " வாழ்க்கை வாழ்வதற்கே " எனும் நூல் திருவையாறு தமிழ்ப்பா கல்வி கழகத்தின் முதல் பரிசு பெற்றது .இந்த நூலுக்கு இலக்கிய பீடம் விருது கிடைத்துள்ளது .
இந்த நூலை தந்தைக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் .வியாபாரத்தில் வென்றதோடு நின்று விடாமல் இலக்கித் தொண்டும் செய்து வரும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் அணிந்துரையும் ,பெரிய மீசைக்காரர் எழுத்தாளர் மெர்வின் அவர்களின் அணிந்துரையும் நூலிருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளன .நண்பர்களை மறக்காமல் பெயர் குறிப்பிட்டு நன்றியைப் பதிவு செய்துள்ளார் .இந்த நூலில் 32 கட்டுரைகள் உள்ளன .அமுதா என்ற நிறுவனத்தின் அதிபர் என்பதால் நிறுவனத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக பெயர்க்கு முன்பாக நிறுவனத்தின் பெயரையும் இணைத்துக் கொண்டவர் . தொழிலை அந்த அளவிற்கு நேசிப்பவர் .இவரை செல்லிடப் பேசியில் அழைத்தால் வணக்கம் அமுதா என்று நிறுவனம் பெயர் சொல்லியே தொடங்குகின்றார் .அந்த அளவிற்கு நிறுவனத்தின் மீது பற்று பாசம் மிக்கவர் .கட்டுரைகள் பேச்சு நடையிலேயே எல்லோருக்கும் புரியும் படியாக மிக மிக எளிமையாக உள்ளன .
வா ... வியாபாரி ஆகலாம் ! என்ற இந்த நூலை வியாபாரி ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் படித்தால் வியாபாரி ஆவது உறுதி என்று அறுதி இட்டுக் கூறலாம் .சின்னச் சின்ன கதைகளின் மூலம் ,ஒப்பற்ற திருக்குறள்களின் மூலம் பொன் மொழிகள் மூலம் அவையின் ஆத்திச்சுடி மூலம் தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .
.
நேரம் போகலையே - என்பவன் சோம்பேறி !.
பொன்மொழி போன்று வியாபாரி மொழி எழுதி உள்ளார் .
" வியாபாரத்தைப் பற்றி தெரியாமல் வியாபாரம் பண்ண ஆசைப்படுறது ,விசத்தைக் கையில் வச்சு விளையாடுகிற குழந்தைக்குச் சமம் .
ஊதியம் இல்லாமல் கூட வேலை பார்த்து தொழிலைக் கற்றுக் கொண்டு வியாபாரி ஆகு என்கிறார் .
வேலை மணியைப் பார்க்கும் !
உழைப்பு உயர்வைப் பார்க்கும் !
கட்டுரைகள் மிக இயல்பாக இருப்பதால் நூல் , ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் அவர்கள் நம்முடன் பேசுவது போன்று வித்தியாசமான நடை .
'நயம்பட உரை ' என்ற அவ்வை மொழியை வழிமொழிந்து எழுதி உள்ளார் .கட்டுரைகளை அந்தாதி போல ஒரு கட்டுரை முடியும் சொல்லில் அடுத்த கட்டுரை தொடங்கி உள்ளார் .நல்ல உத்தி .எள்ளல் சுவையும் நூலில் உள்ளன .
இந்தியாவின் தேசியப் பறவை தேசிய விலங்கு எல்லாம் எழுதி விட்டு .
இந்தியாவின் தேசிய குணம் எது ? என்று கல்வி கேட்டு .
பொறாமை என்று பதில் எழுதி உள்ளார் .உண்மைதான் .பலர் உழைக்காமலே சோம்பேறியாக இருந்து கொண்டு உழைத்து முன்னேருபவனைப் பார்த்து பொறாமை படும் மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் .
தலைக்கனம் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார் .உண்மைதான் தலைக்கனம் காரணமாக வீழ்ந்தவர்கள் பலரை நம் கண் முன் பார்க்கிறோம் .
முதலில் நல்ல தொழிலாளியாக இருந்து தொழில் பழகு பிறகு முதலாளி ஆகி விடலாம் என்கிறார் .உண்மைதான் .பல் முதலாளிகள் இப்படிதான் உருவானார்கள் .
நாட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ( 679)
ஒட்டரை ஒட்டிக் கொளல் .
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பகைமை உணர்ச்சி மறையும் ,கூட்டு முயற்சி பலன் தரும் என்கிறார் .
பல வருடங்கள் வெற்றிகரமாக தொழில் செய்து வரும் அனுபவம் இருப்பதால் தான் சந்தித்த மனிதர்களைப் புரிந்து , உணர்ந்து நூல் எழுதி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .உளவியல் ரீதியான பல உண்மைகளை எழுதி உள்ளார் .
நேரம் போதலையே - என்பவன் உழைப்பாளி !
பொன்னை விட உயர்வான நேரத்தின் அருமையை நன்கு உணர்த்தி உள்ளார் .
பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வைர வரிகளும் நூலில் உள்ளன .
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் !
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் !
வியாபாரி பகலில் தூங்காதே என்று விழிப்புணர்வு விதைக்கின்றார் .
யானையின் பலம் தும்பிக்கையிலே !
மனிதனோட பலம் நம்பிக்கையிலே !
கேள்வி கேட்டு விடை சொல்லும் விதமாக சிலவற்றை எழுதி இருப்பது சிறப்பு .படிக்க சுவையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளன .
எல்லோரும் பால் ஊற்றுங்கள் என்றபோது எல்லோரும் பால் ஊற்றுவார்கள் நாம் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகுது என்று எல்லோரும் நினைத்து எல்லோருமே தண்ணீர் ஊற்றிய கதை நூலில் உள்ளது .
தாயிற்ச் சிறந்த கோயிலுமில்லை !
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை !
அறநெறி கற்பிக்கும் வைர வரிகள் நூலில் உள்ளன சென்னையின் பெருமைகளில் ஒன்றாகி விட்ட நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .
நூல் விமர்சனதிற்காக இந்த நல்ல நூலை அனுப்பி வைத்த இனிய நண்பர்' நம்பிக்கை வாசல் மாத' இதழ் ஆசிரியர் ஏகலைவன் அவர்களுக்கும் நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக