ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள் 3 ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள் 3 !

நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்!

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வசந்தா பதிப்பகம் ,புதிய எண் 26,குறுக்குத் தெரு ,சோசப் குடியிருப்பு ,ஆதம்பாக்கம் ,சென்னை .6000088. தொலைபேசி 044-22530954.
விலை ரூபாய் 120. 

மரபுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவர் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் . மரபு மட்டுமல்ல  புதுக்கவிதைகள் ஹைக்கூ கவிதைகள் முப்பாவும் எழுதும் ஆற்றல் மிக்கவர் .பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .
.
இந்த நூல் மரபுக்கவிதை விருந்தாக உள்ளது .மரபுக்கவிதை மறக்கமுடியாத கவிதை ,மனதில் பதியும் கவிதை .மரபுக்கவிதைக்கு இணை மரபுக்கவிதை மட்டுமே .கவிதை உலகில் நிலவு மரபுக்கவிதை .நட்சத்திரங்கள் புதுக்கவிதை .நிலவிற்கான  மதிப்பு தனிதான் .பலரால் புதுக் கவிதைகள் எழுத முடியும் .ஆனால் மரபு நன்கு அறிந்த சிலரால் மட்டுமே மரபுக்கவிதை எழுத முடியும் .அந்த சிலரில் சிகரமானவர் நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்.

நேரம் செலவழித்து  மரபுக்கவிதை படித்தால் படிக்கும் வாசகருக்கும் மரபுக்கவிதை பற்றிய புரிதல் கிடைக்கும் . மரபுக்கவிதை சொற்க் களஞ்சியமாக  இருப்பதால் பல புதிய சொற்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் வாய்க்கும் .இந்த நூலும் சொற்க் களஞ்சியமாக  உள்ளது .பாராட்டுக்கள் .தமிழன்னைக்கு அணி சேர்க்கும் விதமாக உள்ளது .

256 பக்கங்கள்  உள்ளன .   .அணிந்துரை ,ஆசிரியர் என்னுரை மடல்கள் என 40 பக்கங்கள்  உள்ளன .  மீதம் 216 பக்கங்கள் கவிதைகள்  உள்ளன இந்த மரபுக்கவிதைகள் உள்ளன .மரபுக்கவிதை நேசர்களுக்கு இந்த நூல் வரம் .

வாழ்வியல் பாடம் சொல்லித் தரும் ஒப்பற்ற திருக்குறளின் சிறப்பை நன்கு உணர்த்தும் கவிதை ஒன்று .

சுருக்கமுடன் முன்னேற  வழிகள் கேட்டேன் 
தூக்கத்தில் கேட்டாலும் சொல்வேன் என்றார் ;

திருக்குறளைக் கொண்டுவந்து கையில் வைத்தார் ;
தேடுகின்ற  முன்னேற்றம்  தெரியும் என்றார் ;

இருக்குமிடம் தெரியாமல் இருந்து விட்டேன் ;
எடுத்தெடுத்துக் படிக்கின்றேன் ! வியந்து போனேன் 

உருக்கமுடன் வள்ளுவனார் பாடம் சொன்னார் 
உள்ளத்தில் பதியவைத்தேன் !உயரம் ஆனேன் ! 

எங்கும்   தமிழ்  ! எதிலும்   தமிழ் !  என்று  முழங்கி விட்டு நடைமுறையில் எங்கும் இல்லை தமிழ் எதிலும் இல்லை தமிழ் என்ற இழி  நிலையைச்  சாடும் விதமான கவிதை மிக நன்று .தமிழனுக்கு தமிழ் உணர்வு தரும் கவிதை .  
.
ஊர்ப்பெயர்கள் தமிழாய் மாற்றுக !

உன்பெயரும் தமிழில்லை ! நீவாழ்  கின்ற 
ஊர்ப்பெயரும் தமிழில்லை ! உலவு கின்ற 

உன்தெருவில் தமிழில்லை ! ஏனில்  லை ? நீ   
ஒருநாளும் கேட்டதில்லை ! புளிப்போம் உப்பும் 

உன்உணவில் மறக்காமல் வைத்துக் கொண்டாய் 
உன்வாயில்  தமிழ்ச்சொல்லை வைத்த துண்டா ?

உன்னழகு குன்றாமல் நடக்கின் றாயே  !
ஊர் நடுவே தமிழிங்கே சிதைய லாமா ?

தமிழர்களின் அடையலாம் தமிழ் .தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான் .தமிழ் வீழ்ந்தால் தமிழனும் வீழ்வான் என்பதை உணர்த்தும் கவிதைகள் ஏராளம் .

தலை  குனிந்த தமிழன் !

தமிழை வீட்டின் வெளியே 
தள்ளி வைத்துச் சென்றவன் !

தமிழன் என்று சொல்லித் 
தலை குனிந்து நின்றவன் !

இலக்கிய இமயம் மு .வ பற்றிய கவிதை மிக நன்று .

மூதறிஞர் நம்மு .வ .முன்னேற்றம் செந்தமிழர் 
காதினிலே ஓதிக் கடமைசெய்தார்  - ஆதலினால் 
எந்நாளும் எஞ்சில் இருக்கின்றார் ; நூற்றாண்டு  
நன்னாளை போற்றுவோம் நன்கு !

கல்லை மலராக்கும் கட்டுரைகள் தீட்டியவர் 
சொல்லைப் பழமாக்கி ஊட்டியவர் ;-இல்லை 
அவர்போல என்றுரைக்கும் ஆற்றல் உடையார் 
எவரும் வணங்கும் எழுத்து !

இப்படி  நூல் முழுவதும் படிக்கப் படிக்க இனிக்கும் தேன்சுவை கவிதைகள் .கவிதைக்கனிகளின் தோட்டம் .நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன்!அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்