தாளம் பண்பலை சர்வதேச இணைய வானொலியின் 11 வது ஆண்டு விழா !

தாளம் பண்பலை சர்வதேச இணைய  வானொலியின் 11 வது ஆண்டு விழா !

.

தாளம் பண்பலைசர்வதேச இணைய  வானொலியின் 11 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு நேரலை  நிகழ்வில் கவிஞர் இரா .இரவி மதுரையில் உள்ள  வானொலி நிலையத்திற்கு  நேரடியாகச் சென்று கலந்து  கொண்டார் .

26.8.2013 அன்று இரவு 9.30 மணி முதல் 11.30 மணி வரை ஒலிபரப்பானது .அறிவிப்பாளர் சசிக்கா உடன்  உரையாடினார் . பல  நாடுகளில் இருந்து  நேயர்கள் தொலைபேசி வாயிலாக கலந்து கொண்டு கேள்விகள் கேட்டனர் .

கவிஞர் இரா .இரவி தாளம் பண்பலை வானொலியின் 11 வது ஆண்டு வாழ்த்துக்  கவிதை சொல்லி தொடங்கினார் .பார்வையற்றவர்கள்  , நூல்கம்  , மது போன்ற தலைப்புகளில் கவிதை வாசித்தார் .ஹைக்கூ கவிதைகளும் வாசித்தார் .ஹைக்கூ தொடர்பான கேள்விகளுக்கும் பதில் அளித்தார் .நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகப்     பாராட்டி  பன்னாட்டு நேயர்கள் மின்   அஞ்சல் அனுப்பி உள்ளனர் .அடிக்கடி  இதுபோன்ற நிகழ்ச்சி நடத்திட வேண்டுகோள் விடுத்துள்ளனர் ..

நிகழ்ச்சி ஏற்பாட்டை இனிய  நண்பர்கள் அறிவிப்பாளர்  ஸ்ரீ ,ராஜ்குமார் செய்து இருந்தனர் .


.
தாளம் வானொலிக்கு வாசித்த வாழ்த்துக் கவிதை !

உலகத்தமிழர் வானொலி தாளம் ! கவிஞர் இரா .இரவி !

உலகத்தமிழர் வானொலி தாளம் ! 
உலகத்தமிழர் நேசிப்பு  தாளம் ! 

தாளம் வானொலி கேட்டிட 
தாளம் போடும் மனசு !

தாளம் வானொலி கேட்டிட 
குதூகலம் ஏராளம் தாராளம் !

செய்திகளை முந்தித் தருவது தாளம் !
செவிகளில் தேனை வார்ப்பது தாளம் !

திரைப்படம் வெளிவருமுன்னே  முந்தி  
தாளம் ஒலிபரப்பும் பாடல்கள் !

தேமதுரத் தமிழோசை தேசமெங்கும் 
தித்திக்க வழங்கி மகிழும் தாளம் !

குயிலினும் இனிய குரல்வளம் 
கொண்டவர்களின் அறிவிப்பு இனிப்பு !

வெல்லத்தமிழ்   என்றும் வாழும் உண்மை 
பிள்ளைத் தமிழ் போல இனிக்கும் தாளம் !

வெற்றிகரமாக  பத்தாண்டுகளைக்  கடந்து 
விவேகமாக பதினோராம் ஆண்டில் தாளம் !

தாளத்தின் வயதோ பதினொன்று !
தாளத்தின் தமிழ்ப்பணியோ  நூற்றாண்டு  !

மனக்காயம் பட்ட நெஞ்சங்களுக்கு மருந்தாக 
மனக்காயம் ஆற்றிடும் பாடல் தரும் தாளம் !

புலம் பெயர்ந்த தமிழர்களின் இல்லங்களில் 
புத்துணர்ச்சித் தந்திடும் ஒப்பற்ற தாளம் !

குறிப்பாக ஈழத்தமிழர்களின் செல்லப்பிள்ளை 
குதூகலம் வாரி வழங்கிடும்   தாளம் !

ஆதவனைப் போலவே ஓய்வின்றி உழைத்து 
இருபத்திநான்கு மணி நேரமும் ஒலிக்கும் தாளம் !

இணையங்களில் இருக்கும் இனிய நேயர்களின் 
இதயத்திலும் செவியிலும் ஒலிக்கும் தாளம் !

வேறு பணிகள் செய்து கொண்டே 
இடையூறு  இன்றி ரசிக்கலாம் தாளம் !

இரவுப் பணி  புரியும் பணியாளர்களுக்கு 
இன்னிசை நல்கிடும் இனிய தாளம் !

பணி முடித்து வந்து ஓய்வெடுப்பவர்களுக்கு 
பாடல்கள் இசைத்து வசப்படுத்தும்  தாளம் !

ஈழத்து நிகழ்வுகளை உலகத்து  நிகழ்வுகளை
இந்தியாவின்  நிகழ்வுகளை தமிழகத்தின் நிகழ்வுகளை

உடனுக்குடன் செய்தியாக  வாசிக்கும்  தாளம் !
ஒருபோதும் ஓயாது ஒலித்திடும் தாளம் !

வானொலிகளில் சிறந்தது தாளம் வானொலி !
வானொலி நேயர்களின் நேயர் விருப்பம் தாளம் !

கேட்டு மகிழுங்கள் தாளம் வானொலி




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்