WINNING STARS. நூல் ஆசிரியர் பொறியாளர் திரு .கே ,. முத்துராஜு நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


WINNING STARS.

நூல் ஆசிரியர் பொறியாளர் திரு .கே ,. முத்துராஜு  
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நூல் ஆசிரியர் பொறியாளர் திரு .கே ,. முத்துராஜு  அவர்கள் என் இனிய நண்பர் .ஆங்கில நூல் இது .முதன் முறையாக ஆங்கில நூலிற்கு விமர்சனம் எழுதி உள்ளேன் .காரணம் இந்த நூலில் உள்ள தகவல் மிக முக்கியமானவை என்பதால் .எல்லோருக்கும் புரியும் விதமாக மிக எளிமையான ஆங்கிலத்தில் எழுதி உள்ளார்கள் .சிலர் ஆங்கில மேதாவித் தனத்தை காட்டுவதாக நினைத்துக் கொண்டு அவர்களுக்கே விளங்காத கடுமையான சொற்களைப் பயன்படுத்தி எழுதுவார்கள் .இந்த நூல் மிக எளிமையாக இருப்பதால் படிக்க சுவையாக உள்ளது .பயனுள்ள பல தகவல்கள் உள்ளன .  ஐ.எ .எஸ் . தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுத்து தேர்விலும் ,நேர்முகத் தேர்விலும் பயன்படும் தகவல்கள் அடங்கிய நூல் இது .நாம் அறிந்த பிரபல சாதனையாளர்கள் பற்றி நாம் அறிந்திராத தகவல்கள் நிரம்பி உள்ளன .

குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மலைவாழ் இனத்தில் பிறந்து . 2012 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் .அவர் பள்ளியில் படித்தது தொடங்கி மம் முடித்து இரண்டு மகன்கள் பெற்று வாழ்ந்த வரும்  வரலாறு அவர்களுடன் உள்ள புகைப்படம் நூலில் உள்ளது .பொது அறிவுக்குப் பயன்படும் சிறந்த நூல் இது .மாணவ மாணவியர் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
.
சாய்னா நேவால் பற்றி விரிவான தகவல்கள் நூலில் உள்ளன .17.3.1990 அன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள தினாரில் பிறந்தார் என்று தொடங்கி ,போட்டிகளில் அவர் பெற்ற 
பதக்கங்களின் பட்டியல் உள்ளது .இவருக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களின்  விபரம்  நூலில் உள்ளன .
  

.நூல் விற்பனையில் சாதனைப் படைத்த , உலகப்புகழ் பெற்ற ஹாரிபர்ட்டர் நாவல் ஆசிரியர் பெண் எழுத்தாளர் J.K.ரோலிங் தற்போது இரண்டு நாவல் பெரியவர்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் எழுதி வரும் தகவல் உள்ளது .

மட்டைபந்து விளையாட்டில் உலக சாதனை நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கர் வரலாறு நூலில் உள்ளன .பத்ம பூசன் விருது ,ராஜீவ் காந்திகேல் ரத்தினா  விருது   ,மைசூர் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்புறு முனைவர் பட்டம் இப்படி பல்வேறு விருதுகள் பெற்ற தகவல்கள் உள்ளன .மட்டை விளையாட்டில் பெற்று ஓட்டங்கள் நூறுகளில் எத்தனை ஐம்பதுகளில் எத்தனை என்ற புள்ளி விபரங்கள் உள்ளன . 

விண்வெளிக்குச் சென்று சாதனைகள் நிகழ்த்திய இந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ் வரலாறு உள்ளன . 
19.9.1965 ல் பிறந்தார் என்று தொடங்கி நாசா விண்வெளி ஆராய்ச்சி  மையத்தில் பெற்ற பயிற்சிகள் விபரம் .வெற்றிகரமாக இரண்டு முறை விண்வெளிக்குச் சென்று வந்த தகவல் .உலகில் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் என்ற சாதனையும் நிகழ்த்தி உள்ளார் .பெண் குலத்திற்கேப் பெருமை சேர்த்துள்ளார் .சுனிதா  வில்லியம்ஸ் .

நூல் ஆசிரியர் பல்வேறு ஆங்கில நூல்கள் படித்து இணையங்களில் படித்து தொகுத்து நூலாக வழங்கி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் இந்த நூல் எழுதிட செலவழித்த நேரம் , உழைப்பை உணர   முடிகின்றது .சமுதாயத்திற்குப் பயனுள்ள நூல்களை எழுதி வருவதற்குப் பாரட்டுக்கள் .

மியன்மார் ஆங் சாங் சூச்சி சிறையில் பல வருடங்கள் இருந்து .பின்னர் இன்று உலகப் புகழ் அரசியல் தலைவராக வளர்ந்துள்ளார் ,மக்களாட்சி  தலைவராக வந்துள்ளார் .1991 நோபல் பரிசு .ஜவர்கலால் நேரு விருது பெற்ற தகவல்கள் உள்ளன .2007 ல்  கனடா கௌரவ குடிமகளாக அறிவித்த தகவல் உள்ளது .

நோபல் பரிசுகள் பெற்று இந்தியாவிற்குப் பெருமைகள் சேர்த்த சர் .சி .வி .இராமன் ,இரவீ ந்திரநாத் தாகூர் ,அன்னை தெரசா ,அமிர்தியா சென் ,வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் ஆகியோர் பற்றிய விபரங்கள்  நூலில் உள்ளன .அவர்களது புகைப்படங்களும் மிக நன்றாக உள்ளன .

இந்திய அளவில் தமிழரின் பெருமையை திறமையைப் பறைசாற்றிய மும்பை ஆட்டோ ஓட்டுனரின் மகள் பிரேமா அகில இந்திய அளவில் நடந்த பட்டயக் கணக்கர் தேர்வில் முதல் இடம் பிடித்த தகவலும் நூலில் உள்ளன .படிக்க ப் படிக்க தமிழர் என்ற முறையில் பெருமையாக இருந்தது .

இனிய நண்பர் கே .முத்துராஜு அவர்கள் மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளியில்  இருந்து கொண்டு பல்வேறு சாதனைகள் பள்ளியில் நிகழ்த்திக் கொண்டே ஆங்கிலம்  ,தமிழ் இரண்டு மொழியிலும் பல பயனுள்ள நூல்கள் படித்து ,அறிந்து ,ஆராய்ந்து நல்ல பல பயனுள்ளநூல்கள் எழுதி வருவதற்குப் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

கருத்துகள்

  1. Dear Ravi

    Thanks a lot
    I feel very elited now more than when I made the book
    U really gone in depth in going thro my ooks
    Can you upload thi to face book

    Regards

    Kmuthuraju

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக