வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வரலாற்றில் இன்று !

நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

இனிய நண்பர் ,நூல் ஆசிரியர் ,பொறியாளர் திரு K.முத்துராஜு அவர்கள் .புகழ்பெற்ற மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணிப்  புரிந்தவர் .தற்போது மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளியின் இயக்குனராக இருப்பவர் .சுழற்ச்சங்கத்தில் உதவி ஆளுநர் பொறுப்பில் உள்ளவர் .ஓய்வின்றி உழைத்து வரும் வல்லவர் .நல்லவர் .அவரின் நூல் எழுதும் திறமை கண்டு வியந்துப் போனேன் .இந்நூல் வெளியிடும் முன்பே என்னிடம் விமர்சனத்திற்காக வழங்கினார்கள் .

இந்நூலை தனது தாயார் K.பூரணம்மாள் , மாமியார் R.கல்யாணியம்மாள் ஆகியோருக்கு சமர்ப்பித்து உள்ளார்கள் . தொடர்ந்து பல விழாக்கள் நடத்தி வருபவர் .சுழற்ச்சங்கத்தின் மூலம் பலருக்கும் பல்வேறு உதவிகள் செய்து வருபவர் .

பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவியர் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் .ஜனவரி 26 தொடங்கி  டிசம்பர் 26 வரை முக்கிய தினங்களை விளக்கங்களுடன் ,காரண காரியங்களுடன் எழுதி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு  அவர்கள் ஆங்கிலம், தமிழ் நூல்களை ஆர்முடன் படித்து வரும் படிப்பாளி இப்போது படைப்பாளி ஆகி உள்ளார்கள்.

  இணையத்தில் முக நூலில் முக்கியமான கருத்துக்களை எழுதி வருபவர் .முக்கிய விழா புகைப்படங்களை பகிர்ந்து வருபவர் .நானும் முக நூலில் அவர் கருத்துக்களுக்கு பாராட்டைப்  பதிவது உண்டு .சமுதாயத்திற்கு பயன்படும் விதத்தில் பொது அறிவு சுரங்கமாக, பொக்கிசமாக நூலை வடித்துள்ளார்கள் .அந்தந்த தினங்களுக்கு முற்றிலும் பொருத்தமான புகைப்படங்களும் இருப்பதால் படிக்கும் தகவல் மனதில் மறக்காமல் பதிவாகி விடுகின்றது .

." உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4
புற்றுநோய்க்கு முதல் காரணம் புகையிலை .வாய் ,தொண்டை புற்றுநோய் ஏற்பட இதுவே காரணமாகும் .மதுபானம் ,புகையிலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் .சீரான உடல் எடை தேவை .செல்களின் கட்டுக்கடங்காத ,அபரிமிதமான வளர்ச்சியால் புற்றுநோய்ஏற்படுகிறது ."

இந்த தகவலை படித்தவுடன் திரையரங்குகளில் திரைப்படத்திற்கு முன்பாக போடும் புகையிலை எதிர்ப்பு செய்தித்திரைப்படம் நினைவிற்கு வந்தது .இதுதான் நூல் ஆசிரியரின் வெற்றி .நூலில் தினங்களின்  தகவல்கள் நிறைய உள்ளன .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .எழுதி உள்ளேன் .

"இந்திய அறிவியல் தினம் பிபரவரி 28.
ஒளி  சிதறல் கண்டுபிடிப்பை சர் சி.வி .ராமன் அறிவித்தார் .ராமன்  விளைவு என அவரது பெயரால் அழைக்கப்படும் .இந்த ஒளி  சிதறல்  கண்டுபிடிப்புக்காக 1930-ம்  ஆண்டு இயற்பியலுக்காக நோபல் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது ."

இந்திய அறிவியல் தினத்தில் சர் சி.வி .ராமன்  என்ற விஞ்ஞானியின் ஆற்றலை எழுதி உள்ளார் .

"சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8
இன்று பெண்கள் விண்வெளி ,மருத்துவம் ,விமானம் உட்பட பல துறைகளில் சாதனை 
படைக்கிறார்கள் ."
ராணுவத்தின் மிக உயர்ந்த பதவிலும் முதல் முறையாக பெண் வந்துள்ள செய்தி படித்தது என் நினைவிற்கு வந்தது.
உலக நுகர்வோர் தினம் மார்ச் 15
தரமற்ற பொருட்களை உற்பத்தியாளர்கள் அளித்தால் அதனை எதிர்த்து நுகர்வோர்  உரிய தீவு காண நுகர்வோர் நீதி மன்றங்களை அணுகலாம் .இதனால் நுகர்வோருக்கு தங்களது ரூபாய் உரிய முறையில் கிடைக்கும் .

இந்த செய்தியைப் படித்ததும் எனது நண்பர் மகள் ,நண்பர்  இறந்தபின் உரிய தொகை தர மறுத்த, ஆயுள்  காப்பீட்டு நிறுவனத்தின் மீது நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றிப் பெற்று பணம் பெற்ற நிகழ்வு நினைவிற்கு வந்தது .

நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு அவர்கள் மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளியின் இயக்குனராக திறம்பட செயல்படுவதோடு சிறப்பான நூல்களும் எழுதி வருவது மிக்க மகிழ்ச்சி .

" உலக ஆட்டிசம் தினம் ஏப்ரல் 2
18-24  மாதங்களில் சேர்ந்து விளையாடாமல் திணியாக இருத்தல் ,கைகளை உதறிக் கொண்டே இருத்தல் ,கதை கேட்பதில் விருபமின்மை ,தூங்கும் நேர்டம் குறைவு தூக்கமின்மை ,கீழே விழுந்தால் வழியை உணராத நிலை ஆட்டிசம் குறைபாடு அறிகுறியாகும் .இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு   ஆட்டிசம் குறைபாடு  இருக்கின்றது ."

இந்த தகவலை படித்தவுடன் எனக்கு சமீபத்தில் வந்த மிகச் சிறந்த திரைப்படமான ஹரிதாஸ் நினைவிற்கு வந்தது .

ஆட்டிசம் குறைபாடு அறிகுறி மட்டும் எழுதாமல் ,எதனை பேர் உள்ளார்கள் என்ற புள்ளி விபரத்துடன் மிக நுட்மாக எழுதி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .

முக்கிய தினங்களின் முக்கியம் உணர்ந்து ,முக்கியம் பற்றி முக்கியமான தகவல்களுடன் எழுதியுள்ள முக்கிய நூல் இது .இந்நூல அனைவரும் படிக்க வேண்டியது முக்கியம் .



.

கருத்துகள்

  1. நூல் ஆசிரியர் இனிய நண்பர் திரு .முத்துராஜூ அவர்களின் மடல்
    Dear Ravi

    No words to say

    Thanks a lot

    Your encouragement is really a tonic

    You really deserve my friendship

    Regards

    Kmuthuraju

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக