நீங்களும் மகுடம் சூடலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நீங்களும் மகுடம் சூடலாம் !

நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

புகழ் பதிப்பகம் .B.5-3 அக்ரிணி குடியிருப்பு ,ஆண்டாள் புறம் ,மதுரை .625003.
விலை ரூபாய் 100.

நூல் ஆசிரியர் கலைமாமணி , முனைவர் இளசை சுந்தரம் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் இயக்குனராகப்  பணி   புரிந்து ஒய்வு பெற்ற பின் இலக்கியப் பணி ,தமிழ்ப் பணி  என்று ஓய்வின்றி உலகம் சுற்றி வருபவர் .கனடா   அரசாங்கத்தின் விருது  பெற்றவர் .இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .நூல் வெளியீட்டு விழா நடந்த அரங்கத்தை இலவசமாக வழங்கியவரும், விஸ்வாஸ்ப்ரோமொடேர்ஸ்  மேலாண்மை இயக்குனருமான திரு .சங்கர சீதாராமன் இந்த நூலினைப் பற்றி மிகச் சிறப்பான ஆய்வுரை நிகழ்த்தினார் .

  நூல் ஆசிரியர் ஏற்புரையின் போது நான் உலக நாடுகள் பல சென்று வந்ததற்கு கவிஞர் இரா .இரவிதான் சாட்சி என்றார்கள் .அவரது இலண்டன் பயணத்தை நண்பர் பொன் பாலசுந்தரம் அவர்களுக்கு தகவல் தந்தேன் .அவர் அவரை சந்தித்தார் .கனடாவில் உள்ள நண்பர் திரு .அகில் அவர்களுக்கு நூல் ஆசிரியர் கனடா பயணத்தை தகவல் தந்தேன்.  அவரை திரு .அகில் சந்தித்தார்.நான் சென்ற வெளி நாடுகளில் எல்லாம் இரவியின் நண்பர்கள் சந்தித்தார்கள் என்று சொன்னார் .

.ஓய்வின்றி பயணம் செய்து உரையாற்றுவது மட்டுமன்றி எழுத்துப் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறார் .பாக்யா  வார இதழில் தொடராக எழுதிய கட்டுரைகள் நூலாகி உள்ளது .பாக்யா  வார இதழில் வாராவாரம் படித்த போதும் மொத்தமாக நூலாகப் படித்தபோது மிகச் சிறப்பாக இருந்தது .20 நூல்கள் எழுதி உள்ளார்கள் .இந்த நூலிற்கு ' உங்கள் மகுடம் உங்கள் கையில் ' என்று இருந்த தலைப்பை பாக்யா  வார இதழின் ஆசிரியர் இயக்குனர் திலகம் திரு .பாக்யராஜ் அவர்கள் நீங்களும் மகுடம் சூடலாம் ! என்று பெயர் சூட்டி உள்ளார் .

கட்டுரைகளின் தலைப்புகளே  நூல் படிக்கும் வாசகரை சிந்திக்க வைக்கும் விதமாக உள்ளன .29 கட்டுரைகள் உள்ளன .குறிக்கோளை குறி வையுங்கள் ,கனவு காணுங்கள் ,செயலில் இறங்குங்கள் ,இப்படி தலைப்புகளே தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளன .சிந்திக்க வைக்கும் சிறந்த நகைச் சுவை துணுக்குகளும் நூலில் உள்ளன.

சின்னச் சின்ன கதைகளும் இருப்பதால், படிக்க சுவையாகவும் ,சுகமாகவும் உள்ளன .தன்  முன்னேற்றக் கருத்துக்களின்   .சுரங்கமாக உள்ளது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு .இதோ .

" சிலர் இளமையிலேயே முதுமை அடைந்து விடுகிறார்கள் .சிலரோ முதுமையிலும் 
இளமையாய் இருக்க முடிகிறது .உற்சாகமும் , சந்தோசமும் கொண்டவர்கள் வயதானாலும் இளைஞர்கள் தாம் .உற்சாகமற்ற பேர்வழிகள் இளமையிலேயே கிழவராகி விடுவார்கள் ."

உண்மைதான் நாம் வாழ்கையை உறசாகமாக ரசித்து வாழ வேண்டும் .என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .

சிந்திக்க வைக்கும் வைர வரிகள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .

" சந்திர மண்டலத்தில் இடம் பிடிப்பது மட்டும் அறிவல்ல மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் ."
மற்றவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால் நாம் மனிதநேயத்தோடு பல பணிகள் செய்ய வேண்டும் .

நம்மில் பலருக்கு அடுத்தவரை பாராட்டு மனம் இருக்காது .அப்படியே  பாராட்டினாலும் அதிலும் கஞ்சத்தனம் இருக்கும் .காசா பணமா மனம் திறந்து பாராட்ட ஏன் யோசிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நல்ல சிந்தனை விதைக்கும் கருது இதோ .

வாரியார் சுவாமிகள் சொல்வார் .

"பாராட்டிப் பழகுங்கள் ஒருவன் குந்தையாக இருக்கும்போது அவனுக்குக் கிடைப்பது தாலாட்டு .கடைசியில் வாழ்க்கை முடித்து விட்டு போகும்போது அவனுக்குக் கிடைப்பது நீராட்டு .இரண்டுக்கும் இடையில் அவனை வாழ வைப்பது பாராட்டுத்தான்  ." 

நூலில் நிறைய நகைச்சுவைகள் இருந்தாலும் ஒன்று மட்டும் உங்கள் பார்வைக்கு .

ஓர் இளைஞர் ஒரு கைரேகை நிபுணரிடம் போனார் .தான் நினைத்த காரியம் நிறைவேறுமா ? என்று கேட்டார் .ரேகைகளையும் மேடுகளையும் ஆராந்தா சோதிடர் எல்லாம் நன்றாக இருக்கிறது .நினைத்தது நிறைவேறும் .என்றார் .
எதிர்ப்பு எதுவும் இருக்காதே !
இருக்காது .
சண்டை சச்சரவு  பிரசனை எதுவும் ஏற்படுமா ?
ஏற்படாது .
அப்படின்னா என்னை வாழ்த்தி அனுப்புங்க மாமா .நானும் உங்கள் மகளும் பதிவுத் திருமணம் செய்யப் போகிறோம்.,
 
.எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் எழுத்துப் பிழைகள் வந்து விடுவதுண்டு .இந்த நூலில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன .அடுத்த  பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .

வாழ்க்கையில் முன்னேற , சாதிக்க , வெற்றிப் பெற எப்படி திட்டமிட வேண்டும் என்று கற்றுத் தரும்  நல்ல நூல் .இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல் .சாதிக்க வேண்டும் என்ற வெறியைத் தூண்டும்  வண்ணம் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூல் படிக்கும் முன் இருந்த மன  நிலைக்கும் படித்த முடித்தபின் உள்ள மன நிலைக்கும் உள்ள முன்னேற்றமே  நூலின் வெற்றி. நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் .வெற்றி

-- 

.

-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

  1. வாரியார் சுவாமிகள் சொன்னது தான் மனிதனுக்கு இருக்க வேண்டிய முதன்மை குணம் உட்பட நூலின் விமர்சன சிறப்புகளுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக