ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ  ( சென்றியு )    கவிஞர் இரா .இரவி !

நிரந்தரமானது 
தூக்கம் 
மரணம் !

சிரிக்கும் பிச்சைக்காரன் 
சாலையோர வியாபாரியிடம் 
கையேந்தும் காவலர் !

மதித்து 
மிதித்தார்கள் 
யானை லத்தி !

பாரபட்சம் கடவுளிடமும் 
வெளியே மதுரைவீரன் முனியாண்டி 
மீனாட்சி கோயில் !




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்