ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ  ( சென்ரியூ  )     கவிஞர் இரா .இரவி !

அன்பு என்ற விதை 
விருட்சமானது 
காதல் !தேவதை சாத்தான் 
இரண்டும் உண்டு 
மனதில் !

ஓராயிரம் அதிர்வுகள் 
கண்டதும் உள்ளத்தில் 
அவள் புன்னகை !

தங்கக்கூண்டும் 
சிறைதான்  
கிளிக்கு !

வெல்வேன் என்ற 
நினைப்பே 
முதல் வெற்றி !

ஆடிப்பட்டம் 
தேடி விதைத்தனர் 
வீட்டடி மனை கற்கள் !

படியில் பயணம் 
நொடியில் மரணம் 
படித்துவிட்டு படியில் !

கரம் சிரம் புறம் 
நீட்டாதீர்கள் 
படித்துவிட்டு நீட்டினர் !

மாற்றுத்திறனாளி நிற்கையில் 
மாற்றுத்திறனாளி இருக்கையில் 
மற்றவர்கள் !

அன்று தொண்டு 
இன்று கொள்ளை 
கல்வி நிறுவனங்கள் !

உருவமின்றியும் தாலாட்டியது 
கிளைகளை 
தென்றல் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

 1. கரம் சிரம் புறம்
  நீட்டாதீர்கள்
  படித்துவிட்டு நீட்டினர் !
  - இப்படித்தான் எந்த நீதியையும் கடைபிடிப்பதில்லை என்பது சங்க காலம் தொடங்கி இன்று வரையிலும் நாளையும் நீடிக்கும் உண்மை...

  கேட்பவர்கள் - அதன் படி நடப்பவர்கள் யாரேனும் ஒருவர் இருவர் என்று கூடத்தான் செய்கிறார்கள்...

  கவிதைகளுக்குப் பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக