தந்திக்கு வந்தது இறுதி! கவிஞர் இரா .இரவி !

தந்திக்கு வந்தது இறுதி!    கவிஞர் இரா .இரவி !


விடுதலை பெறுமுன்னே வந்தசேவை தந்தி!
விடுதலைப் பெற்று விட்டது  தந்தி !

விஞ்ஞான கண்டுபிடிப்பால் வந்தது !
விஞ்ஞான வளர்ச்சியால் வழக்கொழிந்தது !

நஷ்டத்தில் இயங்கியதால் உன்னை !
இஷ்டத்திற்கு முடித்து விட்டனர் கதையை !

செல்லிடப் பேசிகள் வருகையால் !
செல்லாக் காசாகி மதிப்பிழந்தது !

பயன் இல்லா முதியோரை இன்று !
பையன்களை முதியோர் இல்லம் சேர்ப்பதுபோல !

பயன்படுத்துவோர் குறைந்திட்டதால் !
புழக்கத்தில்   இருந்த தந்தி முடிந்தது !

வாகனம் செல்லாத கிராமங்களுக்கும் !
விரைந்து சென்று சேர்ந்தது தந்தி !

ஒரு காலத்தில் தந்தி தர ஆள் வந்தாலே !
ஒருவர் இறந்து விட்டதாய் அழுவார்கள் !

விடுப்பை விண்ணப்பிக்கப் பயன்பட்டது !
விடுப்பை நீட்டிக்கப் பயன்பட்டது !

செய்தியை முந்தித் தருவது தந்தி என்பதால் ! 
செய்தித்தாளுக்கும் உன் பெயர் சூட்டினார்கள் !

விழாக்களுக்குச் செல்ல முடியாதவர்கள் சார்பாக!  
விழாக்களுக்குச் சென்று வாழ்த்தியது தந்தி !

நலம் குன்றிய தகவலை உறவுகளுக்கு! 
நாடு முழுவதும் சொல்லி வந்தது தந்தி !

உறவுகள் இறுதியாக முகம் பார்க்க !
உதவிகள் செய்து வந்தது தந்தி !

இறுதிச்சடங்குகள் நடந்திட பல்லாண்டுகளாக  
இந்தியா முழுவதும் உதவியது தந்தி !

நல்லது கெட்டது அனைத்திலும் 
நாளும் பங்குப் பெற்றது தந்தி !

பலரின் இறுதி சொன்ன தந்திக்கு !
வந்தது இறுதி இனி மேல் வராது உறுதி !

கருத்துகள்

கருத்துரையிடுக