குழந்தைகள் குக்கூ ...
நூலில் உள்ள அனைத்து குக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .மின் அஞ்சல் tharuvavairdeepan@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம் .சென்னை .600018.
விலை ரூபாய் 60.மின் அஞ்சல் minminihaiku@gmail.com
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் .
ஒப்பற்ற திருக்குறளுக்கு விளக்கம் தரும் விதமாக குழந்தைகள் இலக்கியம் படைத்துள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் . .இந்த நூலை ஆறிலிருந்து அறுபது வரை யாவரும் படிக்கலாம் .'ஓடி விளையாடு பாப்பா ' என்று பாடிய மகாகவி பாரதியார்தான் முதன் முதலில் குக்கூ கவிதைகளை தமி ழில் அறிமுகம் செய்தவர் .அவர் வழி நின்று இவரும் குக்கூ கவிதை எழுதி உள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் .அவர்கள் அரசுப்பணியில் , பரபரப்பான வட்டாட்சியர் பணி புரிந்துக் கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருவது பாராட்டுக்குரியது . சுட்டிப் பூங்கா என்ற ஹைக்கூ கவிதை நூலின் மூலம் பரவலானப் பாராட்டைப் பெற்ற கவிஞரின் அடுத்த படைப்பு இந்நூல்
குயிலின் கூவலாக கவிதை வடித்துள்ளார் . எவ்வளவு கவலை , சோகம் நம்மிடையே இருந்தாலும் குழந்தை களின் சிரிப்பைக் கண்டால் கவலை , சோகம் காணமல் போகும் .இந்த நூல் வாசிக்கும் வாசகர்களுக்கும் கவலை , சோகம் காணமல் போகும் .என்று உறுதி கூறலாம்
.
அட்டை முதல் அட்டை வரை அனைத்தும் மிக நன்று .அச்சு ,வடிவமைப்பு யாவும் மிக நன்று .குழந்தைக் கவிஞர் அழ .வள்ளியப்பாவின் திருமகள் நா .தேவி நாச்சியப்பன் அவர்களின் வாழ்த்துரை மிக நன்று .இந்த நூலை வடிவமைத்து , வாழ்த்துரை வழங்கி வெளியிட்டு உள்ள மின்மினி இதழ் ஆசிரியரும் , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி கவிஞர் கன்னிகோயில் இராஜாவின் கை வண்ணம் நூல் ஆசிரியரின் கவிதைகளுக்குச் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளன .குழந்தைகளின் புகைப்படங்கள் கவிதைகளுக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக உள்ளன .
.
அட்டை முதல் அட்டை வரை அனைத்தும் மிக நன்று .அச்சு ,வடிவமைப்பு யாவும் மிக நன்று .குழந்தைக் கவிஞர் அழ .வள்ளியப்பாவின் திருமகள் நா .தேவி நாச்சியப்பன் அவர்களின் வாழ்த்துரை மிக நன்று .இந்த நூலை வடிவமைத்து , வாழ்த்துரை வழங்கி வெளியிட்டு உள்ள மின்மினி இதழ் ஆசிரியரும் , ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி கவிஞர் கன்னிகோயில் இராஜாவின் கை வண்ணம் நூல் ஆசிரியரின் கவிதைகளுக்குச் சிறப்புச் சேர்ப்பதாக உள்ளன .குழந்தைகளின் புகைப்படங்கள் கவிதைகளுக்கு மேலும் சுவை கூட்டும் விதமாக உள்ளன .
நூலில் உள்ள அனைத்து குக்கூ கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .
படபடக்கும்
குழந்தைகளின்
இமைகள்
தெரித்து
விழும்
ஹைக்கூப் பூக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்களின் ஹைக்கூப் பார்வை மிக நன்று .
குழந்தைகள் விளையாடுவதை ரசித்து மகிழலாம் .குழந்தைகளோடு விளையாடினால் குழந்தைகளாகவே மாறி விடலாம் .என்பதை உணர்த்தும் கவிதை நன்று .
குழந்தை
விளையாடும்போது
ஆனந்தம்
குழந்தைகளோடு
விளையாடும்போது
பேரானந்தம் !
நிலாவை எல்லாக் கவிஞர்களும் பாடி உள்ளனர் .நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்கள் வித்தியாசமாக பாடி உள்ளார் .பாருங்கள் .
தெருக்கள் தோறும்
நிலாக்கள்
விளையாடும் அதிசயம்
குழந்தைகள் !
பணம் கூடக் கூட நடிகையின் ஆடை குறையும் அவலத்தை சுட்டும் விதமாக உள்ள கவிதை நன்று .
அரை குறை ஆடையில்
முகம் சுளிக்க வைத்தபடி
நடிகை !
முழுமையான நிருவாணத்தில்
அழகாக குழந்தை !
பெற்றோர்கள் பலர் குழந்தைகளை விளையாடுவதற்கு அனுமதிப்பதே இல்லை .குறிப்பாக அடுககங்களில் வாழும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்பும் இல்லை .
விரட்டாதீர்கள்
விளையாடவரும்
விளையாட்டுக்களை
அனுமதியுங்கள்
குழந்தைளோடு விளையாட !
பலூன் கண்டதும் பரவசம் அடையும் குழந்தைகளின் மனதைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .
விரிந்து கொள்கிறது
பலூன்களை ஊதும்போது
குழந்தைகளின் மனங்களும் !
அரும்புகளின் குறும்புகள் பார்த்திட அழகோ அழகு !அதனை உணர்த்தும் கவிதை ஒன்று .மிக நன்று .
குதூகலமாய்க்
கும்மாளம் போட்டுக் கொள்கின்றன
குறும்புகள்
குழந்தைகளிடத்தில் !
படிக்கும் வாசகர்கள் மனதில் குழந்தைகளைக் காட்சிப் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளார் .
தவழும் தண்ணீர்
குளிக்கும் குழந்தை
சுத்தமாகிக் கொள்ளும்
நதி !
நிலாவே குழந்தைகளைத் தேடுமாம் நூல் ஆசிரியர் கற்பனை மிக நன்று .
வீடுதோறும்
முற்றங்க்ளைத் தேடுகிறது
நிலா !
குழந்தைகளுக்குப்
பால்சோறு படைக்க !
பல குடும்பங்கள் கிராமம் விட்டு நகரத்திற்கு நகர்ந்து விட்ட காரணத்தால் , நகரத்து வீட்டில் தாத்தா பாட்டி இருப்பது இல்லை .குழந்தைகளுக்குக் கதை சொல்ல யாரும் இல்லை .அதனை உணர்த்தும் கவிதை .
கிராமத்து
வீட்டுத் திண்ணையில்
நசுங்கிக் கிடக்கும்
ஏராளமான கதைகள்
குழந்தைகளுக்காக !
கடலையும் குழந்தையையும் வாசகர்களுக்கு காட்சிப் படுத்தும் கவிதை நன்று .
கால்களை
நனைத்துக் கொள்ள
குழந்தைகள் வருகையில்
களிப்படைந்து விடுகிறது கடல் !
குழந்தைகள் காலையில் கண் விழித்தவுடனேயே சுறுசுறுப்பாகி விடுவார்கள் .அவர்களை ரசித்தால் நமக்கும் சுறுசுறுப்பு வந்து விடும் .
படுக்கையிலிருந்து
குழந்தை எழுகையில்
விழித்துக் கொள்கின்றன
விளையாட்டுகள் !
இப்படி நூல் முழுவதும் குழந்தைகள் !குழந்தைகள் !குழந்தைகள் ! தவிர வேறு இல்லை என்று சொல்லும் அளவிற்கு குழந்தை இலக்கியம் படைத்துள்ள நூல் ஆசிரியர் கவிஞர் பே .ராஜேந்திரன்அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்
.
.
கருத்துகள்
கருத்துரையிடுக