இளவரசனோடு முடியட்டும் ! கவிஞர் இரா .இரவி !
இரண்டுமே அவமானம் சமுதாயத்திற்கு !
இரண்டு காதலர்கள் இணைந்து வாழ்வதை
இன்னும் எதிர்ப்பது மடமை !
கணினி யுகத்திலும் சிலர் இன்றும்
காட்டுமிராண்டித்தனமாக நடப்பது கொடுமை !
இளவரசனும் திவ்யாவும் சாதிகளை மறந்து
இருவரும் உண்மையாக காதலித்தது உண்மை !
இருவரையும் பிரித்தது சாதிச் சங்கங்களின் சதி !
இனி திரும்புமா ? இளவரசன் உயிர் தருவார்களா ?
உண்மை காதல் அல்ல நாடகம் என்று
உரைத்தவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டது !
கொலையாக இருந்தால் இது
காட்டுமிராண்டிகளின் கொடூர செயல் !
இளவரசன் தற்கொலையாக செய்து
இருந்தால் அவசர செயல் இது !
திவ்யா முதல் நாள் உரைத்தது
இளவரசனே என் இனிய கணவன் !
இளவரசன் இல்லத்தினர் அனைவரும்
என்னிடம் அன்பாக இருந்தார்கள் !
என் அம்மாவின் சம்மதத்திற்காக
என் வீட்டில் காத்து இருக்கிறேன் !
பெற்றோர்களும் இறந்து விடுவேன் என்று
பெற்ற பிள்ளைகளை மிரட்டுவது கொடுமை !
மறுநாள் உரைத்தது வாழ மறுத்தது
மனம் வலித்தது இளவரசனுக்கு !
சில நாளில் திவ்யாவின் மனம்
சிறிதே மாறி இருக்கும் !
மாற்றம் ஒன்றுதானே மாறாதது
மாற்றம் நிகழ்ந்து இருக்கும் !
இளவரசனே தற்கொலை என்றால்
இன்னும் நீ வாழ்ந்து காட்டி இருக்கலாம் !
மனிதநேய ஆர்வலர்கள் எல்லோரின்
மனதையும் ரணமாக்கியது உன் மரணம் !
கொலையாக இருந்தால் கொலை புரிந்த
கொடூரன்கள் தண்டிக்கப்பட வேண்டும் !
பெரியார் பிறந்த மண்ணில் சாதி
பேதைமை பார்ப்பது மடமை !
மனிதன் பகுத்தறிவைப் பயன்படுத்தினால்
மண்ணில் கொலை தற்கொலை நிகழாது !
இனி ஒரு கௌரவக் கொலை
எங்கும் நடைபெறக் கூ டாது !
காதல் தற்கொலைகளும் முட்டாள்தனம்
காதலர்கள் வாழ்ந்து காட்டுவதே நன்று !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
http://www.noolulagam.com/
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக