கவி ஓவியா மாத இதழ் தந்த தலைப்பு !

கவி ஓவியா மாத இதழ் தந்த தலைப்பு !

சேமிக்கப் பழகு ! கவிஞர் இரா .இரவி !

வரவுக்கு மேலே செலவுகள் செய்யாதே !
வாடி நின்று வருத்தம் கொள்ளாதே !

வருமானத்தில் ஒரு பகுதி சேமிக்கப் பழகு !
தன்மானத்துடன் என்றும் வாழப் பழகு !

எலும்பில்லா எறும்பு கூட சேமிக்கின்றது !
எலும்புள்ள மனிதன் சேமிக்காதது ஏனோ ?

எதிர்பாராத செலவுகள் வரும்போது !
எடுத்துச் செலவழிக்க உதவிடும் சேமிப்பு !

இன்றைய சேமிப்பு நாளைய பூரிப்பு !
இனிதே சேமித்தவர் இன்பமுடன் வாழ்வர் !

ஆடம்பரம் வேண்டாம் அறவே நிறுத்திடு !
அவசிய செலவுகள் மட்டுமே செய்திடு !

சிக்கனமாக இருந்தால் தினமும் சேமிக்கலாம்
மெத்தனமாக இருந்தால் துன்பமே மிஞ்சும் !

வருங்காலம் வளமாக சேமிக்கப் பழகு !
வருத்தமின்றி வாழ்ந்திட சேமிக்கப் பழகு !
----------------------------------------------------------------------------------
கவி ஓவியா மாத இதழ் தந்த கேள்வி !

வாழ்க்கையில் வெற்றி பெற எது தேவை ?

வாசகர் பதில் ! கவிஞர் இரா .இரவி !

வாழ்க்கையில் வெற்றி பெற தேவை தன்னம்பிக்கை .
தன்னம்பிக்கை .இருந்தால் வெற்றி பெறலாம் .என்னால் முடியும் எதுவும் முடியும் என்றே முயன்றால் சாதிக்கலாம் .மூன்றாவதுகை தன்னம்பிக்கை .
வெற்றிக்கான உரம் தன்னம்பிக்கை .உருவம் இல்லாத உருப்பு தன்னம்பிக்கை .உள்ளத்தில் இருப்பதே சிறப்பு .எதை இழந்தாலும் பெறறு விடலாம் .

.தன்னம்பிக்கையை இழந்தால் எதையும் பெற முடியாது .எதையும் பெற்றுத் தரும் ஆற்றல் தன்னம்பிக்கைக்கு உண்டு .
.உன்னால் முடியும் .நீ நம்ப வேண்டும் .இந்த உலகில் நீ நேசிக்கும் நபர் யார் ? என்று கேட்டால் முதலில் உன்னைச் சொல் .பிறகு நேசிக்கும் மற்றவரைச் சொல்,.உன்னை நீ முதலில் நேசி ! பிறகு மற்றவரை நேசி .உன்னை நீ விரும்பு .உனக்குள் அரும்பும் தன்னம்பிக்கை .மூச்சு விடுபவன் மட்டுமல்ல மனிதன் .முயற்சி செய்பவனே மனிதன் .உன் மீது தன்னம்பிக்கை . வைத்து தொடர்ந்து முயன்றால் வெற்றி மாலை உன்னைத் தேடி வந்து விழும் .வாழ்க்கையில் வெற்றிப் பெற மூலதனம் தன்னம்பிக்கை .
----------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பக்கக் கட்டுரை !

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் !
கவிஞர் இரா .இரவி !

"இலவசமாக மீன் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தருவதே சிறந்தது ."என்று சீனப் பழமொழி உண்டு .மக்களுக்கு இலவசங்கள் ( விலையில்லாப் பொருட்கள் )தருவது தற்காலிக நன்மை .அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி ஊதியம் வழங்குவது, வாழ்வாதாரத்தை வளப்படுத்துவது நிரந்தர நன்மை. இன்று உலகமயம் ,தாராள மயம் ,புதிய பொருளாதாரம் என்ற பெயரில் விளை நிலங்களை எல்லாம் செல் நிறுவனங்களுக்கும் ,கார் நிறுவனங்களுக்கும் தாரை வார்த்து தடையின்றி மின்சாரம் வழங்கி வருகின்றனர்.

விவசாய நிலங்களில் விவசாயி விவசாயம் செய்ய முடிய வில்லை .மனம் வெறுத்து விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர் .இளைஞர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடி அலையாய் அலைந்து வேலை கிடைக்காமல் மனம் நொந்து மதுக்கடைக்கு சென்று மது அருந்தி வாழ்வைச் சீரழித்து வருகின்றனர் .இன்னும் சில இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் பணம் ஈட்ட வழியின்றி குற்ற செயல்களில் , வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் .தீவிரவாதிகள் ஆவதற்கும் மூளைச் சலவை செய்து விடுகின்றனர் .உலகமயம் ,தாராள மயம் ,புதிய பொருளாதாரம் என்ற கேடான முடிவுகளுக்கு முடிவுகட்டி தேசப்பிதா காந்தியடிகள் குறிப்பிடடது போல நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் மகிழ்வோடு வாழ விவசாயம் செழிக்க வழி வகை செய்வோம் .இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வேலை இல்லாத்
திண்டாட்டத்தை இல்லாது ஒழிப்போம் .உற்பத்தியைப் பெருக்கி தன் நிறைவு பெற்ற நாடாக்க திட்டங்கள் தீட்டுவோம் .செயல்படுத்துவோம் .

நமது நாட்டைக் கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவன ங்களை நம் நாட்டை விட்டே .விரட்டுவோம் .வெள்ளையர்களை விரட்டியது போன்று பன்னாட்டுக் கொள்ளையர்களையும் நாட்டை விட்டு விரட்ட வேண்டும் .விவசாயிகளுக்கு விவசாயம் செய்திட தண்ணீர் கிடைக்க வில்லை அண்டை மாநிலங்கள் வஞ்சித்து வருகின்றன .இருக்கும் கொஞ்சம் தண்ணீரையும் பன்னாட்டுக் கொள்ளையர்கள் ஆற்றில் இருந்து உறிஞ்சி எடுத்து பாட்டில்களில் அடைத்து தண்ணீராகவும் , புற்று நோய் வரவழைக்கும் குளிர்பானங்களாகவும் நமக்கே விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர் .தடுக்க நாதி இல்லை .

பான்பராக் தடை விதைத்துப் போன்று உடலுக்குத் தீங்கு தரும் குளிர்பானங்களுக்குத் தடை விதித்து .விவசாயிகள் உழைப்பால் வரும் இளநீர் அனைவரும் விரும்பி அருந்திட வேண்டும் .விவசாயிகளும் , இளைஞர்களும் ,உழைக்கும் மக்கள் அனைவரும் கவலையின்றி மகிழ்வோடு வாழ வழி வகை செய்ய வேண்டும் .இனி ஒரு தற்கொலை நம் நாட்டில் நடைபெறா வண்ணம் நம் மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தி வாழ்க்கையை ரசித்து வாழ வழி செய்வோம் வாருங்கள் . 

கருத்துகள்