ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ   ( சென்றியு )   கவிஞர் இரா .இரவி !

உயிருக்காக ஓடியது 
தப்பியது 
மான் !

உணவுக்காக ஓடியது 
தோற்றது 
சிறுத்தை !


பயமின்றி 
மின் கம்பியில் 
மாடப்புறா !

முந்தித் தருவதாகப்  பலரின் 
வாழ்க்கையை முடித்தன 
ஊடங்கங்கள் !

உடல் உள்ளம் 
இரண்டுக்கும் நன்மை 
தியானம்  !

வியர்வைத் துடைத்தான் 
மலர்களுக்கு 
கதிரவன் !

அணையாத நெருப்பு 
நெருப்பே இருப்பு 
ஆதவன் !

சாதியை மற 
சாதிக்க நினை 
வெற்றி உமது !

ஜீவன் இழந்தன 
ஜீவ நதிகள் 
மணல் கொள்ளை !

சிற்பி  இல்லை 
சிலை உண்டு 
அழியாதது கலை !

இன்றும் உரைத்தது 
மன்னரின் புகழ் 
அரண்மனை !

வெட்டப்பட்டன 
திருமணத்திற்காக வாழை 
மரணத்திற்கு மூங்கில் !

பித்தாலாட்டம் 
கை வந்த கலை 
அரசியல் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

  1. சாதிக்க நினைப்பது உட்பட அனைத்தும் அருமை...

    கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக