அன்பார்ந்த தமிழ் மன்ற ஆர்வலர்களே,
நாங்கள் தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களாகப் பொறுப்பேற்று அரையாண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் "பொங்கல் விழாவில்" சிறப்புடன் தொடங்கிய எங்கள் பயணத்தில் அடுத்த நிகழ்வாக "முத்தமிழ் விழா" தமிழ் அறிஞர்களின் சங்கமமாக நடைபெற உள்ளது.
நாள் : ஜூலை 13, சனிக்கிழமை.
இடம் : Windermere Ranch Middle School
11611 East Branch Pkwy, San Ramon, CA 94582.
இவ்விழாவை அருட்திரு தனிநாயகம் அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவாக நடத்த உள்ளோம் என்பதனை அறிவீர்கள். அப்பெருமகனாரின் தமிழ்ப் பணியினைப் பாராட்டிப் பேசுவதற்கு இசைவு தந்துள்ள அறிஞர்கள் விபரம்:
|
தலைப்பு : “தனிநாயகம் அடிகளாரின் வாழ்வும் தமிழ்ப் பணியும்”
|
|
தலைப்பு : "தமிழாய்வும் தனிநாயகம் அடிகளாரும்"
(பேராசிரியர் விஜயலட்சுமி ரங்கராஜன் அவர்கள் பேராசிரியர் அ .வேலுப்பிள்ளை அவர்களின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது ) |
|
பேராசிரியர் பிளேக் வென்ட்வொர்த் (Blake Wentworth ) , தமிழ்ப் பேராசிரியர், கலிபோர்னியாப் பல்கலைக்கழகம், பெர்க்கலி
பேராசிரியர் பிளேக் வென்ட்வொர்த் அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டி அவர்களை நம் தமிழ் மன்றம் சிறப்பு விருந்தினராக அழைத்து சிறப்பிக்க உள்ளது.பேராசிரியர் பிளேக் வென்ட்வொர்த் அவர்கள் பேராசிரியர் விஜயலட்சுமி ரங்கராஜன் அவர்களின் மாணவர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. |
| பேராசிரியர் இரா.மோகன்,மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை (ஓய்வு)
http://www.eramohannirmala.com/
தலைப்பு : "தமிழ் உலா"
முனைவர் நிர்மலா மோகன், பேராசிரியர் (ஓய்வு ),செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.
தலைப்பு : "நாடகத் தமிழ்"
பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் நூறாவதுநூலை ("கவிதைக் களஞ்சியம்") , நம் தமிழ் மன்றமுத்தமிழ் விழாவில் வெளியிட உள்ளோம்என்பதனை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.
|
| திரு. சி.மகேந்திரன்,ஆசிரியர், தாமரை இதழ். Deputy Secretary, CPI Party (Tamilnadu Unit)http://www.youtube.com/watch?v=o41zqejI7Jc
தலைப்பு : " "யாதும் ஊரே யாவரும் கேளிர்!"
(அய்யா திரு.தமிழருவி மணியன் அவர்கள் நம் விழாவில் கலந்துகொள்ள இருந்தார்கள், ஆனால் அவர்களின் கடவுச்சீட்டு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அய்யா அவர்கள் பேசிய,காலத்தால் அழியாத ஓர் உரையின் ஒரு பகுதி.... http://www.youtube.com/watch?v=250ZlqHQKSM ) |
முத்தமிழ் விழாவின் முதல் நிகழ்வாக நடைபெற இருக்கிற தமிழிசை நிகழ்ச்சியில் நம் வளைகுடாப் பகுதியில் உள்ள நம் சிறார்கள் பங்குபெற உள்ளனர். கீழ்கண்ட இசைப்பள்ளி மாணவர்கள் தமிழிசை நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார்கள்.
3. Sri Lalitha Gana Vidyalaya School.
தமிழ் மன்றத்தின் விழாக்களில் பங்கேற்பதோடு , தமிழ் மன்ற உறுப்பினராகி ஆதரவு நல்குமாறுஅன்போடு வேண்டுகிறோம்.
தமிழ் மன்றச் செயற்குழு.
கருத்துகள்
கருத்துரையிடுக