மனதில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி

மனதில் ஹைக்கூ 
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி 
நூல் விமர்சனம் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி 
மின்னல் கலைக் கூ டம் ,117 எல்டாம்ஸ் சாலை .சென்னை .18
விலை ரூபாய் 40. செல் 9841436213

மனதில் ஹைக்கூ ........மிகவும் அருமையான  நூல் ! பலவிதச் சிந்தனைகளை மனதில் ஏற்படுத்துகிறது ......சிந்தனை வயப்பட்டாலே செயல் வடிவம் பெரும்.மனிதர்களுக்கு  , மனிதர்களைப் பற்றிச் சிந்திக்கச் சொல்லியிருக்கிறார் .தங்களைப்பற்றித் தாங்களே சிந்திக்கத்தெரியாத  மனிதர்களுக்கு , வேறு யாராவது சொன்னால்.....சொல்லும் முறையில் சொன்னால் அது அவர்களைச் சென்று அடையும் என்பதாக ஒரு 'ஆசானைப்' போல நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி சொல்லியிருப்பது நல்ல படிப்பினை..

..தொலைக்காட்சிப் பெட்டியே கதி..எனக் கிடக்கும் மக்களைக்  குறிப்பாகப் பெண்களை வேறு  சிந்தனைக்குச் செல்லுங்கள் எனக் கூறுவது......அதுவும் தலையில் கொட்டுவது போல் கூறுவது......நல்ல அறிவுறுத்தல்!

தமிழ்ப்பண்பாடு  சிதைப்பு 
தமிழர் திருநாளில் 
தொ(ல்)லைக்காட்சிகள்!

நல்ல ஹைக்கூ ....
தமிழர் திருநாட்களில் குழந்தைகளுக்கு நமது நாட்டுப் பண்பாட்டைப்பற்றிக் கூறுவதைவிடுத்து அனைவரும்  தொலைக்காட்சியில் யார் யாரையோ பார்க்கிறார்கள்.....
மக்கள் திருந்தவேண்டும் .......தொலைகாட்சி பார்ப்பது தவறில்லை......ஆனால், அதே கதி என .....இருத்தல் நன்று அல்ல என்பதை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நன்றாகவே சாடியிருக்கிறார்.

ஹைக்கூ புகழாரம் அருமை.    சுருங்கச் சொல்லி விளக்கும் ஹைக்கூக்களை ..  ...'ஹாய்'  எனக்கொள்ளலாம் .
'கணினி யுகத்தின் 
கற்கண்டு 
ஹைக்கூ!'
உருவத்தில் கடுகு 
உணர்வில் இமயம் 
ஹைக்கூ!
உழைப்பில்லையேல் பிழைப்பில்லை என்பதை அறியாத மக்கள் , தங்களுக்குச் சுக்கிர திசை எப்போது ? எண்  சோதிடம் , சோதிடம் பார்ப்பது....மூடத்தனம் என்பதைச்  சாடுகின்ற  பார்வை அருமை!

எதிர்காலம் அறிவதாக 
நிகழ்காலம் வீணடிப்பு 
சோதிடம்!
இன்னும் பல .......
சமுதாயம் திருந்த வேண்டும் என்பதில் உள்ள அக்கறை .......
இமயமாக உயரவேண்டியவன் 
படுபாதாளத்தில் விழுமிடம் 
டாஸ்மாக்!
வருங்காலத் தூண்கள் 
வழுக்கி விழுமிடம் 
டாஸ்மாக்!
இன்னும்     நிறைய .......

மனதை வருடிச் செல்லும் தென்றல் கவிதைகள் நிறைய ..நிறைய..

காதலைப் பற்றி காவியமும் படிக்கலாம்........ஹைக்கூவும் எழுதலாம் எனச் சவாலாக  பல கவிதைகள் இந்நூலில் மின்னுகின்றன.....காதலை  மேம்படுத்துகின்றன.
உணர்ந்தவர்களுக்கு மட்டும் 
புரிந்திடும் உன்னத சுகம் 
காதல்!

ஆஹா........என்ன இது .......ஒரு பார்வை என்று சொல்லி.......'மனதில்  ஹைக்கூ' படித்தவைகள் அத்தனையும் கொட்டுகிறேனே .....
இனி ......பிற வாசகர்களின் பார்வைக்கு.........நூலைக் கொடுக்கலாம்.




.

கருத்துகள்