மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் . திரு .ஜோதி மகாலிங்கம், மலேசியா திரு .சேதுமாதவன், திரு .சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் கவிஞர்கள் கே .விஸ்வநாதன் ,இரா .கணேசன் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற செல்வி கார்த்திகாவிற்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கப் பட்டது .
தன் முன்னேற்றப் பயிற்சியாளர் கவிஞர் கோ அவர்கள் "தடைகளும் விடைகளும் " என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார்.
"தொடர் வண்டி இந்தியாவிற்கு வந்தபோது மூடநம்பிக்கை காரணமாக எதிர்த்தனர் .தொடர் வண்டி வந்ததால் கடவுள் கோபம் கொண்டு நோய்கள் தந்தார் .என்றனர் தடைகள் வந்தது .விடைகள் கண்டனர் . இன்று உலகில் தொடர்வண்டி பயன்பாட்டில் முதல் இடத்தில இந்தியா உள்ளது .எல்லா தடைகளுக்கும் விடைகள் உண்டு .மனிதனுக்கு வேலை 8 மணி நேரம் ,ஓய்வு 8 மணி நேரம்,தூக்கம் 8 மணி நேரம் இப்படி வகுத்தனர் .ஓய்வு 8 மணி நேரத்தை இது போன்ற தன் முன்னேற்ற பயிற்சிகளில் கலந்து கொள்வதின் மூலம் பயனுள்ளதாக்க முடியும் ." இப்படி பல்வேறு பயனுள்ள கருத்துக்களைக் கூறி தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார். தினேஷ் நன்றி கூறினார் .
.தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர் ஆ .முத்துக் கிருஷ்ணன்,சுரேஷ் ,உதயம் ஜீவா ,G.K. உள்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக