கவியரசு என்றால் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி .


கவியரசு என்றால் கண்ணதாசன் !   கவிஞர் இரா .இரவி .

கவியரசு என்றால் கண்ணதாசன் !   
கண்ணதாசன் என்றால் கவியரசு !

"ஆறு மனமே ஆறு " பாடலின் மூலம் 
ஆறுதல் வழங்கிய கவியரசு நீ !

"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் " பாடலில் 
தோற்றவருக்குத் தெம்பு  தந்தவன் நீ !

"நான் மலரோடு தனியாக" பாடலில் 
நல்ல காதலை சுகமாக வடித்தவன் நீ !

"மலர்களைப்  போல் தங்கை" பாடலுக்கு 
மயங்காத உள்ளம் இல்லை உலகில் !

"போனால் போகட்டும் போடா "பாட்டில் 
புத்திப்புகட்டும் நிலையாமையைப் பாடினாய் !

"நான் சார்ந்த மதம் தாமதம் "என்று சொல்லி 
நீ தாமதத்தையும் நகைச்சுவையாக்கியவன்  !

சித்தர்கள்  பாடல்களை எளிமைப் படுத்தி   
சித்திரமாய் திரையில் தீட்டித் தந்தவன் நீ !

வாழ்வியல் கருத்துக்களை பாடல்களில் 
வற்றாத ஜீவ நதியாக  வார்த்தவன்  நீ !

காதலின் வேதனையை பாட்டில் 
கடவுளோடு ஒப்பிட்டுப் பாடியவன் நீ !

ஆங்கில  இலக்கியம் படிக்காத   நீ 
ஆங்கில  இலக்கியம் வென்றாய் பாட்டில் !

சங்க   இலக்கியத்தை  திரைப்பாடலில் வைத்தாய் 
சாமானியருக்கும் புரிந்திட பாடல் படைத்தாய் !

கம்ப இராமாயண கருத்துக்களையும் 
கனிச்சாறாக பாட்டில் பிழிந்தவன் நீ !

"படைப்பதனால் என் பெயர் இறைவன்" என்று 
படைத்தாய் இறவாத பாடல்களை நீ !

எந்த நிலையிலும் மரணமில்லை என்று பாடி 
இன்றும் எங்கள் மனங்களில் வாழ்கிறாய் நீ !

உனக்குப் பின் பாட்டெழுத யார் யாரோ வந்தனர் 
உன் இடத்தை யாருமே எட்ட வில்லை ! 

கவியரசு என்றால் கண்ணதாசன் !   
கண்ணதாசன் என்றால் கவியரசு !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்