சாரல் காலம் !
.மேஸ்ட்ரோ இளையராஜா பற்றிய கவிதை நன்று .அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதி விட முடியாது என்ற காரணத்தால் இன்னும் கவிதைகள் எழுதவில்லை .உள்ளே சென்று நூலைப் படித்துப் பாருங்கள் .உங்கள் உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் கவிதைகள் உள்ளன .
நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி !
நூல் அணிந்துரை ; கவிஞர் இரா .இரவி !
வானிலிருந்து வரும் அமுதம் மழை .உலக உயிரினங்களின் உயிர் மழை .ஒப்பற்ற மழை பற்றி பல்வேறு கோணங்களில் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் மா .முத்துப்பாண்டி.உள்ளத்தில் உள்ளது கவிதை .உள்ளத்து உணர்வு கவிதை .கண்ட காட்சி கவிதை என்று முத்தான கருத்துக்களால் முத்துக் கவிதை வடித்துள்ளார் .மா .முத்துப்பாண்டி .
மழையைப் பற்றிப் பல்வேறு கவிஞர்கள் கவிதை எழுதி உள்ளார்கள் .ஆனால் கவிஞர் மா .முத்துப்பாண்டி அளவிற்கு மழை பற்றி யாரும் எழுதவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .அந்த அளவிற்கு அடை மழை போல கவிதைகளைக் கொட்டி உள்ளார் .சாரல் காலம் கவியருவியில் குளித்த மகிழ்ச்சியைத் தருகின்றது .பாராட்டுக்கள் .
இயற்கையை ரசிக்கத் தெரிந்தால்தான் இயற்கைப் பற்றி எழுதிட முடியும் .நூல் ஆசிரியர் கவிஞர் மா.முத்துப்பாண்டி மழை கொட்டுவதை இமை கொட்டாமல் ரசித்த காரணத்தால் , மழையைப் பற்றி பல்வேறு கவிதைகள் வடித்துள்ளார் .பதச்சோறாக சில வரிகள் மட்டும் .
ரசனை !
கருமேகங்களை நாண
நடனமாடச் சொல்லுங்கள் !
நாம் அனைவரும்
ரசிப்போம் ! ஈர்க்கின்ற
மழைத்துளிகளில் !
நயகன் ,நாயகி பற்றியும் கவிதைகள் உள்ளன .கும்பகோணம் குழந்தைகள் தீ விபத்து ,சுனாமி என சமுதாய நிகழ்வுகள் யாவும் உற்று நோக்கி கவிதைகள் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .இந்த நூலில் புதுக்கவிதைகளும் ,ஹைக்கூ கவிதைகளும் உள்ளன .வாசகர்களுக்கு பல்சுவை விருந்து வைத்துள்ளார் .
பறவைக்காக ஏங்கி பறவை நேசத்துடன் வடித்த ஹைக்கூ நன்று .
எப்போது கிடைக்கும் விடுதலை
இந்த அழகான
கூண்டுக் கிளிக்கு !
தேசப்பிதா காந்தியடிகளின் கள்ளம் கபடமற்ற வெள்ளைச் சிரிப்பைப் பாராட்டும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .
சிரிப்பைப் பார்த்துதான் சிரிக்கவே
கற்றுக் கொண்டேன் ரூபாய்
நோட்டில் காந்தியின் படம் !
நாட்டுப்பற்றை விதைக்கும் விதமாக உள்ள இராணுவ தேசிய மாணவர் படை கவிதை நன்று .கிராமிய மணம் வீசும் வண்ணம் கிராமிய மொழியிலும் கவிதை வடித்துள்ளார் .
காதலைப் பாடாத கவிஞன் இல்லை .காதலைப் பாடாதவன் கவிஞன் இல்லை .கவிஞர் மா .முத்துப்பாண்டியும் காதலைப் பாடி உள்ளார் .
காதல் !
இயங்கிடும் இதயம் பிடிக்கும் !
இரக்கம் வரும் மனம் பிடிக்கும் !
புல்லிடம் பேசும் புன்னகை பிடிக்கும் !
புன்னகையில் மயங்கும் தேன்மொழி பிடிக்கும் !
பிடிக்கும் ! பிடிக்கும் !என்று முடித்து வாசகர்களுக்குப் பிடிக்கும் படியாக கவிதை எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .எதிர் காலத்தில் பெரிய கவிஞராக வருவார் என்பதைப் பறைசாற்றும் விதமாக கவிதைகள் உள்ளன .இது கவிஞர் மா .முத்துப்பாண்டியின் முதல் நூல் மட்டுமல்ல ,முத்தாய்ப்பான நூலாக வந்துள் ளது .வாழ்த்துக்கள் .
மனதில் பட்டதை ,தான் உணர்ந்த உணர்வை ,கண்ட காட்சியைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல கவிதைகள் எழுதி உள்ளார் .மதுரை மன்னர் கல்லூரி மாணவர் .கல்லூரி மாணவப் பருவத்தில் கவிதை எழுதும் படைப்பாற்றலுடன் கவிஞர் மா .முத்துப்பாண்டி திகழ்வது ,இன்றைய இளைய தலைமுறை நல்வழியில் பயணிக்கிறது என்று மகிழ்வடையும் விதமாக உள்ளது .இது முதல் நூல் .கன்னி முயற்சி .தனக்குள் உள்ள கவிதை எழுதும் ஆற்றலை இன்னும் வளர்த்துக் கொண்டு இன்னும் பல நூல்கள் எழுதிட வாழ்த்துகின்றேன் .
கருத்துகள்
கருத்துரையிடுக