ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ   ( சென்றியு )   கவிஞர் இரா .இரவி !

இனிய வரவேற்பு 
இரடிப்பு மகிழ்ச்சி 
கோடை மழை !

சக்தி உள்ளவ்ரை 
நகர்ந்துகொண்டே 
நிமிட முள் !

இன்றும் வாழ்கின்றனர் 
மலை முழுங்கி 
மகாதேவன்கள் !

நாய் விற்ற காசு 
குரைத்தது 
மனதில் !

அன்று " நானே கள்வன் "
மாண்டான் மன்னன் 
இன்று ?

ஆராய்ச்சி மணி 
அடித்த பசு 
அரண்மனை பிரியாணியில் !

முரசுக் கட்டிலில் 
தூங்கிய புலவன் 
முதுகை முறித்தனர் !

மக்களின் மறதி 
அரசியல்வாதிகளுக்கு வசதி 
புதுப்புது ஊழல் !

நாட்டு நடப்பு 
வறுமையிலும் செம்மை ஏழைகள் 
செழுமையிலும் சீரின்றி பணக்காரர்கள் !

காந்தியோடு முடிந்தது 
அரசியிலில் நேர்மை 
நேர்மையின்மை முதல் தகுதி !


கருத்துகள்