மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்    பயிலரங்கம்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்
பயிலரங்கம் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்எ .எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவர்களின் இசை நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது .
தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். ஒருங்கினைப்பாளார் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
ஜி .ராம மூர்த்தி ,C.ராஜேந்திரன் , திரு. பிரபுராம் ,கலாம் கே .ஆர் சுப்பிரமணி வாழ்த்துரை வழங்கினார்கள்கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,கே .விஸ்வநாதன் ,ஸ்ரீ .நி .அரவிந்தன் 
 ஆகியோர் தன்னம்பிக்கை தொடர்பான கவிதைவாசித்தனர் . 
மனிதநேய மாமணி , பார்வையற்ற திரு பழனியப்பன் மூன்றாம் பார்வை  தலைப்பில்    தன் முன்னேற்றப்    பயிற்சி அளித்தார் 
குழந்தை பருவத்தில் பார்வை இருந்தது இடையில் பார்வை பறி  போனது .எனவே எனக்கு பார்வையின் பயனும் ,பார்வையற்றதால்  வரும் துன்பம் இரண்டும் அறிந்த காரணத்தால் பார்வையற்றோரின் துன்பம் உணர்ந்து "அகவிழி பார்வையற்றோர் விடுதி" தொடங்கி நடத்தி வருகிறேன்.இங்கு இருந்து பலர் பள்ளி கல்லுரிகளில் படித்து வருகின்றனர் .பலர் அரசு நடத்தும் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றுள்ளனர் .இசை பயிற்சி தந்து இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறோம் .எனக்கு பார்வை பறி  போனதும் முடங்கி விடாமல் தொண்டு செய்ய எனது அம்மாவும் ,மனைவியும் ,தம்பியும் ,மகளும் ,குடும்பமே துணை நின்றார்கள் தொடர்ந்து 5 வருடங்களாக ரத்த தான முகாமை ,நானும் கவிஞர் இரா .இரவியும் ரத்த தானம் வழங்கி தொடங்கி  வைத்து நடத்தி வருகிறோம் .கண் தான விழிப்புணர்வும் விதைத்து வருகிறோம் .மண்ணுக்கும் தீயுக்கும் இரையாகும் விழிகளை தானம் செய்தால் பலர்க்கு பார்வை கிடைக்கும் .பார்வையற்றோர் மீது மூன்றாம் பார்வை காட்டி உதவுங்கள் .6 பேரோடு தொடங்கி விடுதியில் இன்று 30 பேர் இருக்கிறார்கள் .தன் வீடு தன் குடும்பம் என்று சுருங்கி விடாமல் பிறருக்கு தொண்டு செய்யும் உள்ளம் பெற வேண்டும் .வாழ்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க வேண்டும் ." என்று கூறி அளித்தார் 
திரு தினேஷ்  நன்றி கூறினார் .கார்த்திகேயன் உள்ளிட்ட மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர்  கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .

கருத்துகள்