படித்ததில் பிடித்தது !

படித்ததில் பிடித்தது ! 
இனிய நண்பர் மருத்துவர் கவிஞர் K.சரவணன் அவர்கள் கபிலன் வைரமுத்துவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை  !

அன்பிற்கினிய திரு கபிலன் அவர்களுக்கு வணக்கம்!

பொன்னும், மணியும்,
 வைரமும், முத்தும் என
 நான்மணி நல்கிய நல் மாணிக்கமே!

பெற்றோரின் பெறுந்தவத்தால்
 அன்னையின் மணிவயிற்றில்
 முன்னூறு நாள் கலைபயின்றாய்!

இவ்வுலகம் ஆவல் கொள்ள
இப்புண்ணிய பூமியில் தவழ்ந்தாய்!

குழலின் நாதம்போல்
மகிழ்வாய் மழலை கொண்டாய்!

பாடும் பறவைகள்போல்
பாங்குடனே துள்ளித்திரிந்தாய்!

கண்டங்கள் கடந்து சென்று
கல்வியின் கரைகண்டாய்!

கலையும், தகவல் தொழில்நுட்பமும்
இரு கண்களெனக்கொண்டாய்!

கலையும், இலக்கியமும்
கலந்து விருந்து தந்தாய்!

உயிரின் உன்னதத்தை
 தன் உள்ளத்தில் உணர்ந்துகொண்ட
மருத்துவர் மங்கை நல்லாள்
மனதிற்கு இனியவனானாய்!

அன்னையும் தந்தையும்
காட்டிய நல் அன்பு வழியில்
மனதிற்கு இனியாளோடு
இல்லரத்தில் நல்லரம் கொண்டாய்!

இல்லரத்தின் நல்லரத்தால்
இனிய வாழ்வின் பெறும்பயனாய்
மெட்டூரி என்ன்னுமொரு
மொட்டொன்றை மலரச்செய்தாய்!

அன்னை தந்தையற்குப் பிள்ளையாய்

அன்பு மனைவிக்குக் காதலனாய்

செல்ல மகளுக்குத் தந்தையாய்

வாசகர் விறும்பும் நற்கவிஞநாய்

இன்றய இளைஞர்களின் முன்மாதிரியாய்

முப்பத்தோராண்டுகள்

முரையாய் கடந்து வந்தாய்!
முப்பத்து இரண்டாம் ஆண்டில்

முதலடி எடுத்து வைக்கும்

அன்பின் கபிலனே!

உனக்கென் அன்பு வாழ்த்துகள்!

அந்னையும் தந்தையும்

அன்புடன் உடனிருக்க

அன்பும் அறிவும்
 அழகென்று கொள்க!

இலக்கியமும் கலைகளும்
 இன்பமெனக்கொள்க!

உருதியும் ஊக்கமும்
உயர்வென்று சொல்க!
உண்மையும் நேர்மையும்
உனதென்று வெல்க!

எல்லா நலமும் வளமும்
எல்லையின்றி பெறுக!

ஈடில்லா இன்பநிலை
என்னாளும் பெறுக!

இன்றுபோலென்றும்
இன்புற்றிருப்பதற்கு
எல்லாம்வல்ல
இயற்கையை வணங்குகிறேன்!

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகளுடன்,

-- 

கருத்துகள்