வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி !

வீட்டில் ஆணி அடித்தால் உடன் !
வீட்டுக்கார்  சொல்லால் ஆணி அடிப்பார் !

வீட்டுக்கார் அருகில் வசித்தால் !
வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம்தான் !

சொந்த வீட்டை விற்று விட்டு !
வாடகை வீடு வந்தால் வலி அதிகம் !

நம் குழந்தை அவர் குழந்தை சண்டையிட்டால் !
நம் குழந்தை அடங்கிப் போக வேண்டும் !

நாய் வளர்க்க நம் மகள் ஆசைப்பட்டால் !
நாயை விட அதிகம் குரைப்பார் வீட்டுக்காரர் !

வருடா வருடம் வாடகை ஏற்றுவார் !
வாய் பேசாமல் தந்தாக வேண்டும் !

வாடகை வீட்டில் குறை இருந்தால் !
வீட்டுக்காரரிடம் பயந்து சொன்னால் !

இஷ்டம் என்றால் இரு !கஷ்டம் என்றால் போ! 
இஞ்சி தின்ன குரங்குப் போல கத்துவார் !

பிடிக்காத புதிதாக வந்த வீடு !
பிடிக்கத் துவங்கி மனம் ஒப்பும் !

வீட்டைக் காலி செய்யச சொல்லி !
 வீட்டுக்காரர் உத்தரவு போடுவார் !

மறுபடியும் வீடு பார்க்கும் படலம் !
மொத்தமாக முன்தொகை கேட்பார்கள் !

சொந்த வீடு கட்டும் ஆசையில் !
சொந்தமாக மனை வாங்கி ஏமாந்தோம் !

வாடகை வீடு மாறி மாறி குடும்பத்திற்கு !
வலிக்கிறது நெஞ்சம்  துக்கமே மிச்சம் !

படிவங்கள் பூர்த்தி செய்யும் போது !
பார்த்தால் நிரந்தர முகவரி கேள்விக்கு நெஞ்சு வலிக்கும் !

இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு !
என்று சொல்லி வைத்தனர் வீடு மாறியே  நொந்தோம் !

குறைந்த பட்சம் ஆதார் அட்டை கூட !
கொடுப்பதில்லை வீடு மாறியவர்களுக்கு !

ஒருவனுக்கு பத்து வீடுகள் உண்டு !
பலருக்கு ஒரு வீடு கூட இல்லை !

எட்டு அடுக்கு மாளிகையில் ஒரே ஒரு குடும்பம் !
எட்டிப் பார்க்கும் குழாயில் பல குடும்பம் !

அனைத்து வீடுகளையும் அரசுடமையாக்கி !
ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு மட்டும் தாருங்கள் !

கருத்துகள்