கச்சத்தீவு ! கவிஞர் இரா .இரவி !

கச்சத்தீவு  !     கவிஞர் இரா .இரவி   !

யாருடைய  தீவில் 
யாரடா விரட்டுவது 
கச்சத்தீவு  !

ஒண்ட வந்த பிடாரி 
ஊர்க்காரனை விரடியதாம் 
கச்சத்தீவு  !

தானம் தந்த இடத்தில 
தந்தவனைச் சுடுவானாம் 
கச்சத்தீவு  !

விடுவானாம் சீனாக்காரனை 
விடமாட்டானாம் தமிழனை 
கச்சத்தீவு  !

பிச்சைப் பெற்றவன் 
பீத்திக் கொள்கிறான் 
கச்சத்தீவு  !

உதவலாம் நண்பனுக்கு 
பகைவனுக்கு உதவுவது மடமை 
கச்சத்தீவு  !

கடைத்தேங்காய் எடுத்து 
வழிப் பிள்ளையாருக்கு 
கச்சத்தீவு  !

தமிழனைக் காக்க முடியாதவர்களுக்கு 
தமிழன் நிலம் தானம் தர உரிமை உண்டா ?
கச்சத்தீவு  !

விடவில்லை வணங்கிடவும் 
விடவில்லை வலை உலர்த்த  
கச்சத்தீவு  !

ஒப்பந்தம் மீறுகிறான் 
கையொப்பம்  இனி செல்லாது 
கச்சத்தீவு  !

அப்பாவி மீனவனுக்கு விட்டு 
அடப்பாவியே வெளியேறு 
கச்சத்தீவு  !

தமிழர் வளத்தைச் சுரண்டி 
சிங்களன்  வளம் கொழிக்கிறான் 
கச்சத்தீவு  !

ங்கள் தீவில் 
எங்களை விரட்ட யாரடா நீ 
கச்சத்தீவு  !

எம் இனம் அழித்த 
ஈனனுக்கு இனி இடமில்லை 
கச்சத்தீவு  !

சீரழித்த சிங்களனுக்கு 
இடமில்லை வெளியேறு 
கச்சத்தீவு  !

தானம் தந்த கை முறிக்கும் 
தரமற்றவனே வெளியேறு 
கச்சத்தீவு  !


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்