மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !

வெப்ப பூமியில் குளிராடை அணிந்து !
விளையாடும் முட்டாள் விளையாட்டு !

சதி செய்து போலியாக ஆடும் ஆட்டம் பார்த்து !
சகோதரர்களிடையே குடும்பத்தில் சண்டை ! 

முடிவில்தான் தெரியும் விளையாட்டின் முடிவு
முடிவை  முடிவு செய்து ஆடுகின்றனர் !

விளையாடும் முன் யார் தோற்பது முடிவெடுத்து 
விளையாட்டுக்கு விளையாடுகிறார்கள் !

பிடிக்க வேண்டிய நல்ல பந்தை !
பிடிக்காமல் கீழே விட்டு நடிக்கின்றனர் !

வேண்டுமென்றே ஓங்கி தூக்கி அடித்து 
விளையாடி பிடிக்க விட்டு விடுகின்றனர் !

தடுக்க வேண்டிய பந்தை வேண்டுமென்றே 
தடுக்காமல் விட்டு நான்கு ஆக்கி விடுகின்றனர் !

ஆறு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை 
ஒரு ஓட்டம் எடுத்து முடிகின்றனர் !

நான்கு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை 
நன்றாக விலகி குச்சியில் விழ வைக்கின்றனர் !

எதிரணி வெளியேற்றும்  முன்பே திட்டமிட்டு !
இவர்களாகவே வெளியேறி விடுகின்றனர் !

கேப்பையில் நெய் வடியுது என்றால் 
கேப்போரின் மதி எங்கே போனது ?

வாட்டும் வருமையிலும்  ஏழைகள் !
நாட்டில் செம்மையாக வாழ்கிறார்கள் !

வளமையில் வாழும் பணக்கார்கள் !
விளையாட்டில் சூதாடி கொள்ளை அடிக்கிறார்கள் !

வென்றாலும் தொற்றாலும் பரிசுப்பணம் !
விளம்பரத்தில் நடித்து கோடிப்பணம் !

சூதாட்டிகளிடமிருந்து மறைமுகமாக 
சூதுப் பணம் இவர்களா வீரர்கள் ?

விளையாட்டு வீரர்கள் என்ற சொல் வேண்டாம் 
விளையாட்டுத் திருடர்கள் என்பதே சரி !

பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றி 
பார்வையாளர்களை ஏமாற்றும் சூதை அறிந்திடு !

நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து !
நேர்மையான விளையாட்டென நம்பி !

ஏமாறும் தமிழா இனியாவது விழி !
ஏமாந்தது போதும் !விழித்திடு !

.மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! 
--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்