சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .


சுயம் அறி ! சுடர் விடு !

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .

கற்பகம் புத்தகாலயம் 4/2 சுந்தரம் தெரு .தியாகராயர் நகர் .சென்னை 600017.
தொலைபேசி 044-24314347
விலை 30 ரூபாய் .

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் பொறியாளர் ,மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ,குடும்ப நல ஆலோசகர், எழுத்தாளர்  பன்முக ஆற்றலாளர் .அவரது நோக்கம் ; மதிப்பூட்டலின் மூலம் இனிமை காணுதல் .கொள்கை ; மனித வளமே  மண்ணின் மகத்தான மூலதனம் .

சுயம் அறி ! சுடர் விடுஎன்ற இந்த நூலில் உலகப்பொதுமறை கண்ட திருவள்ளுவரின் திருக்குறள் , அறிஞர் சாக்ரடீஷ்  கருத்து ,அறிஞர்  வால்ட் விட்மன்  கருத்து ,கவியரசர் தாகூர் கருத்து  ,கலீல் ஜிப்பிரான் கவிதை வரிகள் ,ஓசோ வரிகள் பல கருத்துக்களை நூலில் பொருத்தமான இடத்தில் மேற்கோள் காட்டி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் ,இந்த நூல் படிக்கும் ஓவ்வொரு வாசகனும் தன்னைத்தானே அறிந்து கொள்ள உதவும் நூல் .

.பக்குவப்பட்ட பொருளாலும் 
பக்குவப் பட்ட மனிதராலும் 
பயன்பாடு மிகும் !
முயன்று முயன்று பயிலப்பயில 
முனைந்து முனைந்து பழகப்பழக 
முன்னேறி உயரஉயர 
பக்குவம் தானே வரும் !

நூல் படிக்கும் வாசகனை பக்குவப்படுத்தி விடுகிறது .
இந்நூல் மிக புதுமையான நடை கவிதை என்றும் கட்டுரை என்றும் பிரிக்க முடியாமல் இரண்டும் கலந்து உள்ள கலவையாக படிக்க சுவையாக மனமாற்றம் தரும் விதமாக உள்ளது .மிக நல்ல நடை .

ஒருவருக்கு ..
தன் மீது 
மதிப்பு எப்போது வரும் ? 
தன்னைத்  " தானே " நேசிக்கத் 
தொடங்கும்போது !
நேசித்தாலே மதித்தலுக்கான 
அடிப்படை அல்லவா  ?

நம்மில் பலர் நம்மையே நேசிப்பது இல்லை .நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர் யார் என்று கேட்டால் நமக்குப் பிடித்த பலரையும் சொல்வோம் .அது தவறு .முதலில் நீங்கள் மிகவும் நேசிக்கும் நபர்  நீங்களாக இருக்க வேண்டும் .பிறகுதான் மற்றவர்களை சொல்ல வேண்டும் .உலகில் பிறந்த  ஒவ்வொருவரும் ,முதலில் தங்களை நேசிக்க வேண்டும் .என்ற உயர்ந்த கருத்தை எழுதி உள்ளார்கள் 
மனதில் பதிய போட  வேண்டிய  கவியரசர் தாகூர் கவிதை வரிகள்    இதோ . 


நீ யார் ?
 என்பதை நீ அறியாதிருக்கிறாய் ...
மாறாக ...
நீ பார்த்துக் கொண்டிருப்பதோ 
உன் நிழலைத் தான் !

சிந்தனை சிற்பி கலீல் ஜிப்ரான் கவிதை வரிகள் .
"அழகு " 
எனக் கருதப்படும் அனைத்தையும் விட 
வசீகரமானதொன்றை 
உங்களின் 
பூரண சுயத்தில் தேடுங்கள் .

உங்கள் திறமையைப் போன்ற அழகு உலகில் எங்கும் எல்லை என்பதை உணர்த்துகின்றார் .

 " மனம் ஒரு குரங்கு " என்பார்கள் எதிர்மறையாளர்கள் ஆனால் நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் நேர்மறையாளர் என்பதால் ,
ஒரு மனிதனின் 
செயல்பாடுகளை வடிவமைக்கும் 
சிற்பி ... 
அவனது மனோபாவம் !

ஒரு மனிதனுக்கு முழு வலிமை தர வல்லது .
1. ஆழமான அறிவு .
2. ஆற்றல் மிகு கலை .
3.ஆக்கப் பூர்வமான மனோபாவம் .
இதனை செம்மைப் படுத்தினால் வாழ்வில் சாதிக்கலாம் 
பலவீனம் எது என்றும் சூத்திரம் எழுதி உள்ளார் .
அறிவீனம் + ஒழு ங்கீனம் = பலவீனம் .

கீழான குணங்கள் பட்டியலிட்டுள்ளார் .
சோம்பல் ,பொறாமை ,கோபம் ( உணர்ச்சிவசப்படுதல் ),எரிச்சல் ,கடுஞ்சொல் ,நேரந் தவறுதல் ,ஒத்திப் 
போடுதல் ,பொறுப் பேற்காமை ( தட்டிக் கழித்தல் ),நேர்மையின்மை ,பொய் களவு புரிதல் ,ஒப்பிட்டுப் பார்த்தல் ,குறை காணுதல் ,அபரிமிதமான எதிர்பார்ப்பு ,மதி ,அவசரப்படுதல் ,அவமதித்தல் ,நன்றி மறத்தல் ,கூச்சப்படுதல், தாழ்வு மனப்பான்மை ,அவ நம்பிக்கை ,தனித் தன்மை உணராமை ,இலக்கின்மை ,திட்டமின்மை,ஈடுபாடின்மை ,கவனச் சிதறல் , கூடி வாழும் பக்குவமின்மை ,முயற்சியின்மை .

நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்கள் குறிப்பிட்டுள்ள கீழான குணங்கள் முடிந்தளவு தவிர்த்து வாழ்ந்தால் சாதிக்கலாம் .வாழ்வில் வெறி பெறலாம் .

நம்மீது நாம் நமிக்கை வைப்போம் !
அதற்கு முதற்படியாய் 
நாம் நம் 
சுயத்தை அறிவோம் ;
எத்தகைய சுழலிலும் சுடர் விடுவோம் !
சுயத்தை அறியுங்கள் ..
சுயத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் ..
சுயத்தை  நேசியுங்கள் ..
சுயத்தை மதியுங்கள் ..

நம்மை நாம் அறிந்துகொள்ள உதவும் அற்புத நூல் .நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .இந்த நூலை எனக்குப் பரிந்துரை செய்த மதுரை புத்தகத்தூதன் நண்பர் திரு சடகோபன் அவர்களுக்கும் நன்றி .

கருத்துகள்