வாழ்க ! வாழ்க ! வாழ்கவே ! அய்யா பொன் பாலசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி

வாழ்க ! வாழ்க ! வாழ்கவே ! அய்யா பொன் பாலசுந்தரம் !
கவிஞர் இரா .இரவி





வாழ்க ! வாழ்க ! வாழ்கவே ! அய்யா பொன் பாலசுந்தரம் !
கவிஞர் இரா .இரவி

பொன் பாலசுந்தரம் பெயர் மட்டுமல்ல 
பொன் போன்ற உள்ளத்திற்கும் சொந்தக்காரார் !

தோன்றின் புகழோடு தோன்றுக என்ற 
திருக்குறளின் இலக்கணம் ஆனவர் !

ஈழத்தில் பிறந்த வீர  சிங்கம் அவர் !
ஈகை குணத்தில் நல் மனத்தில்  தங்கம் அவர் !

ஈழ மண்ணின் பிறப்பிற்கு பெருமைப் பட்டவர் !
ஈழத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர் !

பத்திரிக்கை ஆசிரியராக இருந்து 
பணிகள் செய்து தமிழ் வளர்த்தவர் !

தமிழர் என்றவுடன் தம்மால் முடிந்ததை 
தாமாக வந்து உதவும் உள்ளம் பெற்றவர் !
.
கோவையில் சில ஆண்டுகள் வாழ்ந்து 
கோபுரமாய் உயர்ந்து வழி  காட்டியவர் !

மரபுக் கவிஞர் அதலை ராமனுக்கு 
மதுரையில் கவிதாஞ்சலி நடத்தியவர் !

சிவயோகம் மலர் ஆசிரியராக  இருந்து 
சீர் மிகு மலர்கள் படைத்தவர் !

சீவரத்தினம் அய்யாவின் உதவியால் 
ஜெகம் போற்றும் மலர்கள் படைத்தவர் !

இலக்கியத்தில் மதி நுட்பம் மிக்கவர் !
இளகிய மனம் பெற்ற நல்லவர் !

பேனா மட்டுமல்ல இவருக்கு 
கரண்டியும் பிடிக்கத் தெரியும் !

சுவையான மீன் குழம்பு கறிக் குழம்பு 
சமைப்பதில் சகலகலா வல்லவர் !

சம்மந்தன் அய்யாவின் நட்பின் 
சமந்தத்தால் சமத்தான  செயல் புரிந்தவர் !

உலகளாவிய கவிதைப் போட்டி இருமுறை 
உலகம்  வியந்திட நடத்திட துணை நின்றவர் !

மகத்தான மகள்களை மட்டும் பெற்றவர் !
மற்றவர்களை மகன்களாக மதிப்பவர் !

காலத்தால் அழியாத ஒப்பற்ற 
கல்வியின் சிறப்பை உணர்த்தியவர் !

இலண்டன் மாநகரில் முத்திரை பதித்தவர் !
இனிய தமிழரின் திறமையைப் பறை சாற்றியவர் !

இலண்டன் புதினம் இதழ் ஆசிரியர் 
இராஜகோபாலின் குருவாக இருந்தவர் !

எந்த செயலையும் நேர்த்தியாக 
எந்த நேரமும் திட்டமிட்டு முடிப்பவர் !

பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழாமல் 
பிறந்தோம் சாதித்தோம் என்று வாழ்பவர் !

வையகம் உள்ளவரை தமிழ் மொழி உள்ளவரை 
வாழ்க ! வாழ்க ! வாழ்கவே ! அய்யா பொன் பாலசுந்தரம் !


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்