அன்னையர் தினம் ! கவிஞர் இரா .இரவி !

அன்னையர் தினம் !   கவிஞர் இரா .இரவி !

அன்னையர் தினம் மட்டுமல்ல தினமும் !
அன்னையை நினைப்போம் போற்றுவோம் !

பத்து மாதங்கள் சுமந்துப் பெற்றவள் அன்னை !
பத்துப் போட்டு வளர்த்து எடுத்தவள் உன்னை !

'அ ' வில் தொடங்கும் அற்புதம் அன்னை !
அம்மா அப்பா சொல்லி வளர்த்தாள் உன்னை !

உறவுகளிகளில் ஒப்பற்ற சிகரம் அன்னை !
உலகம் போற்றிட வளர்த்தாள்  உன்னை !

உலகை அறிமுகம் செய்தவள் அன்னை !
உணர்வை ஊட்டி வளர்த்தாள்  உன்னை !

வேதனை சோதனை ஏற்றாள் அன்னை !
வேண்டி விரும்பி பெற்றாள்  உன்னை !

முப்பொழுதும் போற்றும் உறவு அன்னை !
எப்பொழுதும் உயிராய் காப்பாள் உன்னை !

மாதர் குலத்தின் மாணிக்கம்  அன்னை !
மாண்பு மிக்க மனிதனாக்கினாள் உன்னை !

கருவறையில் சுமந்த கடவுள் அன்னை !
கருத்தாக வளர்த்து எடுத்தாள்   உன்னை !

பாசத்தை மழையெனப் பொழிந்தாள்  அன்னை !
பண்போடு வளர்த்து மகிழ்ந்தாள் உன்னை !

உயிர்  தந்துப் பெற்றாள்  அன்னை !
உயிராகப் போற்றி வளர்த்தாள்  உன்னை !

மனைவி வந்ததும் மறக்காதே அன்னை !
மடியில் வைத்து வளர்த்தாள்  உன்னை !

குழந்தை மறந்தாலும் மறக்காதவள் அன்னை !
குழந்தையை என்றுமே வெறுக்காதவள் அன்னை !

அகில உலகம் போற்றும் அன்னை !
அகல் விளக்காய்  ஒளிர்ந்தாள் அன்னை !

தன்னலம்  கருதாத உறவு அன்னை !
தன்குழந்தை நலம் கருதும் அன்னை !

அன்னையின்றி நீயுமில்லை நானுமில்லை !
அகிலம் இல்லை அன்பு இல்லை !

அன்னைக்கு இணையான உறவு உலகில் இல்லை
அன்னைக்கு இணை அன்னை மட்டுமே !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்