புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் ! கவிஞர் இரா .இரவி !


புகையிலைப்  பழக்கம்  ஒழிப்போம் ! 
கவிஞர் இரா .இரவி !

புகையிலையால்   இழந்த உயிர்கள் போதும் !
புகையிலைப் பழக்கத்தை நிறுத்தினால் போதும் !

புகையிலைப் புகைப்பது ஒழுக்கக் கேடு !
புகைத்துத் திரிவது உயிருக்குக் கேடு !

பகை உடல் நலத்திற்கு உணர்ந்திடு !
புகை பிடிக்கும் பழக்கம் உயிர்க்கொல்லி !

தனக்குத்தானே வைக்கும் சுய கொள்ளி !
தானாக முடிவெடுத்து வைத்திடு தள்ளி !

தீமை என்று தெரிந்திருந்து  போதும் !
தீய புகையிலை புகைப்பது முறையோ ! 

பகுத்தறிவைப் பயன்படுத்தி யோசித்தால் !
பயன்படுத்த மாட்டார்கள் புகையிலை !

வாழை இலையில் உணவு உண்பது நல்லது !
புகையிலைப் புகைப்பது மிகவும் கெட்டது !

உடலை உருக்கும் கொடிய  புகையிலை !
உயிரைக் குடிக்கும் கொடிய புகையிலை !

நுரையீரலை புண்ணாக்கும் நச்சு புகையிலை !
நூதனமாய் உயிர் பறிக்கும் புகையிலை !

நடிகரைப் பார்த்து புகைப்பதை நிறுத்து !
நல்லதை மட்டும் நெஞ்சில் நிறுத்து !

உடல் நலத்திற்குக்  கேடு புகையிலை !
உயிருக்குப் பகை கொடிய புகையிலை !

நண்பனைப் பார்த்து நல்லத்தைப் பழகு !
நண்பனைப் பார்த்து கெட்டதை விலக்கு !

புகையாய்  உள் நுழையும் புகையிலை !
புற்றுநோயைப் பரிசாகத் தரும்  புகையிலை !

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் !
என்பது அன்று சொன்ன பழமொழி !

புகையிலைப்  பழக்கம் விரைவில் உன்னை 
சுடுகாட்டுக்கு அனுப்பும் இது புது மொழி !

கையால் தொடாதே புகையிலை !
உதட்டில் வைக்காதே புகையிலை !

முயன்றால் முடியாதது எதுவுமில்லை !
முயன்று வைத்திடு முற்றுப்புள்ளி !


.

கருத்துகள்