உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி !

உழைப்பாளர் தினம் !  கவிஞர் இரா .இரவி !

தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி !
தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி !

தினங்கள் பல் வந்தாலும் எல்லாவற்றிலும் 
உன்னத தினம் உழைப்பாளர் தினம் ! 

வியர்வையை மதிக்கும் விவேக்மான தினம் !
உழைப்பைப் போற்றும் ஒப்பற்ற தினம் !

ஆண்டு முழுவதும் தினங்கள் வந்தாலும் 
ஆண்டாண்டாக மதிக்கும் தினம் உழைப்பாளர் தினம் !

இவ்வுலகின் வளர்ச்சி உழைப்பாளியின் முயற்சி !
இப்பூவுலகின் மலர்ச்சி உழைப்பாளியின் முயற்சி !

உலகில் உழைப்பவன் மட்டுமே மனிதன் !
உலகில் உழைக்காதவன் மனிதன் அன்று !

உழைக்காமல் உண்பவன் திருடன் என்று அன்றே !
உரைத்தார் உயர்ந்த தேசப்பிதா காந்தியடிகள் !

மரத்திற்கு அழகு பூக்கள்  பூப்பது !
மனிதனுக்கு அழகு உழைத்து வாழ்வது !

உலகில் மேன்மையானது உடல் உழைப்பு !
உலகில் மென்மையானது மூளை  உழைப்பு !

உடையில் இருக்கும் ! உள்ளத்தில் இருக்காது கறை !
உடல் நிறம் கருப்பு உள்ளமோ வெள்ளை !

கள்ளம் கபடம்  அறியாதவர்கள் உழைப்பாளிகள் !
கற்கா விட்டாலும் பண்பாளர்கள் உழைப்பாளிகள் !

பிறந்ததன் பயன் உழைப்பில் உள்ளது !
பிறந்தோம் இறந்தோம் என்பதில் என்ன உள்ளது !

உண்ண  உணவு தந்தவன் உழைப்பாளி !
உடுக்க உடை தந்தவன் உழைப்பாளி !

வசிக்க வீடு தந்தவன் உழைப்பாளி !
ரசிக்க மலர் தந்தவன் உழைப்பாளி !

மண்ணை சிலையாக்கியவன் உழைப்பாளி !
பொன்னை சிலையாக்கியவன் உழைப்பாளி !

கல்லை சிலையாக்கியவன் உழைப்பாளி !
மரத்தை சிலையாக்கியவன் உழைப்பாளி !

வண்ணத்தை ஓவியம் ஆக்கியவன் உழைப்பாளி !
எண்ணத்தை விதையாக்கிவன் உழைப்பாளி !

உழைப்பாளி இன்றி உலகம் இல்லை !
உழைப்பாளி இன்றி உயர்வு  இல்லை !

உழைப்பாளி இன்றி வாழ்க்கை  இல்லை !
உழைப்பாளி இன்றி வசந்தம்  இல்லை !

வெயில் மழை  பாராது உழைப்பவன் !
வெந்தசோற்றைத் தின்று வாழ்பவன் !

தொழுவதை விடச் சிறந்தது உழைப்பு !
பூசாரியை விடச் சிறந்தவன் உழைப்பாளி !

வியர்வை காயும் முன் கூலியைக் கொடு !
வேதனை வராமல் உழைப்பாளியை காத்திடு !

வியாபாரியிடம் பேரம் பேசினால் தவறு அன்று !
உழைப்பாளியிடம் பேரம் பேசினால் தவறு !


போற்றுவோம் !. உழைப்பைப் போற்றுவோம் !
போற்றுவோம் ! உழைப்பாளிகளைப் போற்றுவோம் !




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்