விளம்பரங்களும் ! சிந்தனைகளும் ! கவிஞர் இரா .இரவி !

விளம்பரங்களும் ! சிந்தனைகளும்   !   கவிஞர் இரா .இரவி !

குளிர்பானம் விளம்பரம் !

பிரபல இந்தி நடிகர் குளிர்பானம் விளம்பரத்தில் வருகிறார் .சிறு குழந்தைகளைப்  பார்க்க வைத்து குளிர்பானத்தை மடக் மடக் ன்று குடிக்கிறார் .குழந்தைகள் வாயில் எச்சில் ஊறுகின்றது .நமக்கு கொடுக்க மாட்டாரா ? என ஏங்குகின்றன ..உடன் எல்லா குழந்தைகளுக்கும் குளிர்பானம் கொடுப்பது போல எடுத்து இருக்கலாம் .குந்தைகளை பார்க்க வைத்துக் குடித்து ஏமாற்றுவது போல உள்ளது .இந்த விளம்பரத்தில்  எப்படி ? நடிக்க 
சம்மத்திதார் என்று தெரிய வில்லை .நடிகரின் பிம்பத்தை தகர்ப்பதாக உள்ளது .பார்த்துக் கொண்டே இருந்த குழந்தைகள் இளைஞர்களாக வளர்ந்து விடுகின்றனர் .  இந்த விளம்பரம் குழந்தைகள் நேசத்திற்கு எதிராக உள்ளது .மனிதாபிமானமற்ற முறையில் உள்ளது .குளிர்பானம் உடலுக்கு தீங்கு என்று ஆய்வுகள் சொல்கின்றன .ஒரு வேளை குழந்தைகள் குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி எடுத்து இருப்பார்களோ ? என எண்ணத் தோன்றுகின்றது  .

மகிழுந்து விளம்பரம் !

மகிழுந்து வேகமாகப் போகும் ,,உடனடியாக நிற்கும், ,நிறைய வசதிகள் உள்ளது. என்று சொல்லி விளம்பரம் செய்யலாம் .ஆனால் பல மாடி கட்டிடடத்தின் மொட்டை மாடியில் இருந்து பறக்க வைத்து பல மாடிகள் தாண்டி போய் நிற்பதாக மகிழுந்து விளம்பரம் வருகின்றது .இளகிய மனம் படைத்தவர்கள் பார்த்தால் அதிர்ந்து விடுவார்கள் .இந்த விளம்பரத்தைப் பார்த்து யாரவது பல மாடி கட்டிடடத்தின் மொட்டை மாடியில்  இருந்து மகிழுந்து ஓட்டினால் என்னாகும் ?.ஏன் இந்த விபரீத சிந்தனை .

ஆண்களுக்கான வாசனை திரவியம் விளம்பரம் .

ஒரு இளைஞன் வாசனை திரவியம் போட்டுக் கொண்டு வெளியில் வந்தால் .முன் பின் தெரியாத பெண்கள்  எல்லாம் அந்த வாசனை திரவியத்திற்காக இளைஞன் பின்னால் வந்து விடுவது போல காட்டுகின்றனர் .நடைமுறையில் இது சாத்தியமா ? பெண்களை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா ? இந்த விளம்பரத்தை  நம்பி பல இளைஞர்கள் இந்த வாசனை திரவியத்தை பயன் படுத்தி வருகின்றனர் . 
.
ஐஸ் கிரீம் விளம்பரம் .

ஒருவர் மனைவியுடன் லிப்டின் உள்ளே செல்வார் .மற்றவர் ஐஸ் கிரீம் தட்டுடன் வருவார் .மனைவியுடன் வந்தவர் ஐஸ் கிரீம் தட்டை வாங்கிக் கொண்டு பதிலுக்கு தன்  மனைவியை அவரிடம் தந்து விடுவது போல மிக மோசமான விளம்பரம் .எதுவும் செய்வீர்கள் என்று வசனமும் ஒலிக்கும் .யாரவது கேவலம் ஐஸ் கிரீம் பெற்றுக் கொண்டு மனைவியைத் தருவார்களா ? மனைவியைத்  தரும் உரிமை கணவனுக்கு உண்டா ? பெண்ணை இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா ?சிந்திக்க வேண்டாமா ?

ஆண்களின் உள்ளாடை விளம்பரம் .

ஒரு ஆண்  WOMAN   என்று இருக்கும் பெண்கள் கழிவறையில் WO  என்பதில் தொப்பியை வைத்து மறைத்து  MAN என்று ஆக்கி விட்டு  பெண்கள் கழிவறையில் நுழைகிறான் .நம் தமிழ் நாட்டில் தெரிந்தே ஒரு ஆண் பெண்கள் கழிவறையில் நுழைந்தால் செருப்படிதான் கிடைக்கும் .ஆனால் அவனுக்கு பெண்கள் முத்தம் தந்து உதட்டுச் சாயம் அவன் உடம்பில் இருக்கும் .இவ்வளவு கேவலமாக ஆண்களின் உள்ளாடை விளம்பரம்  எடுக்கலாமா ? சிந்திக்க வேண்டாமா ?

சில நிமிடங்கள் வரும் விளம்பரங்கள் என்றாலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் தமிழ் பண்பாட்டை சிதைக்கும் விதமாக உள்ளது .இதுபோன்ற விளம்பகளை தடை செய்ய வேண்டும் .இனி விளம்பரம் எடுப்பவர்கள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்து சொல்லாவிட்டாலும் பரவாயில்லை தீய கருத்து ,நச்சுக் கருத்து சொல்லாமல் இருந்தால் நன்று .


கருத்துகள்