வறுமை கொடிது ! கவிஞர் இரா .இரவி


வறுமை கொடிது ! கவிஞர் இரா  .இரவி 

கொடிது ! கொடிது !
வறுமை கொடிது !
கம்புகளின் மேல் கயிறு !
கயிற்றின் மேல் கால்கள் !
தலையில் செம்புகள் !
கைகளில் கம்பு !
அடி மேல் அடி வைக்கும் போது 
அடிதவறினால் அடி படும் !
இசைக்கு ஏற்றபடி 
பிசகாமல் நடை !
நடு சாலையே 
நாட்டிய அரங்கம் !
நடந்து செல்பவர்களே 
பார்வையாளர்கள் !
பார்த்துச் செல்வார்கள் 
கவனம் சிதறினால் 
மரணம் !
ஜான் வயிற்றுக்கு 
உயிரைப் பணயம் 
வைத்து நடையும் நடனமும் !
காசு போட  குணம் இருக்காது 1
பணம் தர மனம் இருக்காது !
கல் நெஞ்சம் படைத்த 
மனிதர்கள் ?

கருத்துகள்