முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் ஆற்றிய உரை ! தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .


6.4.2013 அன்று தேடல் அமைப்பு மதுரையில் நடத்திய கருத்தரங்கில் 
முனைவர் வெ .இறையன்பு இ.ஆ .ப .அவர்கள் ஆற்றிய உரை !
தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
மனிதர்களில் பல வகை உண்டு .
எல்லோரிடமும் குறை காண்பவர்கள் ஒரு வகை .
சமூக அடையாளத்திற்கு தன்னை ஒப்படைத்துக் கொள்பவர்கள் ஒரு வகை .
சிறந்த அடையாளம் கொண்டவர்கள் சமூகத்திற்கு வழி காட்டுவார்கள் .
பச்சோந்தி மனப்பான்மை உள்ள மனிதர்கள் ஒரு வகை .
வௌவால்  பறவைகள் வெற்றிப்  பெற்றால்,  நானும் பறப்பேன் எனவே நான் பறவையினம் என்று சொல்லுமாம் .விலங்குகள்  வெற்றிப் பெற்றால், நானும் பாலூட்டுகின்றேன் எனவே நான் விலங்கினம் என்று சொல்லுமாம் .வௌவால் போன்ற மனிதர்களும் உண்டு .
ஏதேனும் காரணம் சொல்லி காரியம் சாதிக்கும் மனிதர்கள் ஒரு வகை .
சிலர் சொந்த அடையாளங்களை அழித்து விட்டு தான் எந்தப் பதவியில் இருக்கிறார்களோ அந்தப் பதவியாகவே மாறி விடுவார்கள் .
சிலர் வீட்டிலும் தன்னை அதிகாரியாகவே நினைத்துக் கொண்டு மணி அடிப்பவர்கள் உண்டு .அழைத்த மணிக்கு வர யாரும் இருக்க மாட்டார்கள் .
சிலர் குழந்தையிடம்  அதிகாரியாக நடந்து கொள்வார்கள் .
குழந்தையிடம் குழந்தையாகவே நடந்து கொள்ள வேண்டும் .
தொழிலாளிகளிடம்  தொழிலாளியாகவே நடந்து கொள்ள வேண்டும் .
இந்த பூமியில் எதை விட்டு செல்கிறார்களோ அதுவே அடையாளம் .
 "இந்த உலகத்தில் எது மறைந்தாலும் நான் உருவாக்கிய இந்த நகரம் அழியாது ."என்று ஒரு கல்வெட்டு வைத்தார் ஒருவர் .
அந்த கல்வெட்டு மட்டுமே எஞ்சியது .அவர் உருவாக்கிய  நகரம் அழிந்தது .இது குறித்து கவிதை எழுதும்போது ஒருவர் எழுதினார் .
 "இந்த உலகில் நிலையானது எதுவும் இல்லை .முந்தைய சாதனையை அடுத்து வருபவர்கள் முறியடித்து விடுவார்கள் .நிலைத்த  சாதனை என்று சொல்ல முடியாது ."
யாருடைய இதயத்திலாவது மகிழ்ச்சியை  விதையாய் தூவினால் அது சாதனை .
துன்பத்தில் தவிப்பவர்களுக்கு உதவினால் அது சாதனை.
தத்தளிப்பவர்கள் கரை சேர உதவினால் அது சாதனை .
பிறருக்கு பயன் பட வாழ்வதே சாதனை .

.மகாகவி பாரதியை இன்றும் நாம் ஏன் ?கொண்டாடுகிறோம் .500 ஆண்டுகளுக்கு பின் என்ன ?நடக்கும் என்று அன்றே சிந்தித்தவன் .அவனது சிந்தனையில் 10 சதவிகிதம் கூட நாம் நிறை வேற்ற வில்லை .
திருவள்ளுவர் அடையாளம் எது அவர் சிலையா ? படமா ? இல்லை .திருக்குறளே  திருவள்ளுவரின்  அடையாளம் .திருவள்ளுவர்  இப்படித்தான்  இருந்திருப்பார் என்று நாமாக வரைந்ததே அவர் உருவம் .
சேக்ஷ்பியர் அடையாளம் எது அவர் சிலையா ? படமா ? இல்லை .சேக்ஷ்பியர் இப்படித்தான்  இருந்திருப்பார் என்று நாமாக வரைந்ததே அவர் உருவம் .சேக்ஷ்பியர் அடையாளம் அவரது படைப்புகள் .அவர் படைத்த பாத்திரங்களாக இன்றும் பலர் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் .
புற அடையாளங்கள் உண்மையான அடையாளங்கள் அன்று .தோலின் நிறமோ ,ஆடையோ ,உயரமோ ,இவை அல்ல அடையாளங்கள்.
இந்த உலகிற்கு நிரந்தரமான பங்களிப்பை விட்டு செல்வதுதான் உண்மையான அடையாளம் .
100 பக்கங்கள் உள்ள குறிப்பேட்டில் 10 பக்கங்கள்  மட்டும் எழுதி விட்டு மீதி 90  பக்கங்கள் எழுதாமல் அந்த குறிப்பேட்டை காகிதமாக எடைக்கு விலைக்கு போடுவது குற்றமே .அது போல வாழ்க்கை எனும் புத்தகத்தில் பல பக்கங்களை எழுதாமலே போய் விடக் கூடாது .
இஸ்லாத்தில் ஒரு கேள்வி கேட்பார்களாம் .
உன் அறிவை ,ஆற்றலை முழுமையாக பயன் படுத்தினீ ர்களா ?என்று .
இயற்கை என்ற கஞ்சத்தனமான கணக்காளன் ஒரு வினாடியைக் கூட வீணடிப்பதில்லை .
ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக்க வேண்டும் .
திரைப்படம் பார்த்தால் கூட ஒரு காட்சி உங்கள் வாழ்கையை மாற்றி விடும் .
சத்தியஜித்ரே பார்த்த ஒரு திரைப்படம்தான் அவரை சிறந்த இயக்குனராய் உருவாக்கியது 
பொள்ளாச்சியில் என் நண்பர் ஒருவர் பள்ளி நடத்தி வருகிறார் .அவரிடம் இந்த எண்ணம் எப்படி? வந்தது உங்களுக்கு என்று  கேட்டேன் .
அவர் சொன்னார் ."நான் எட்டாம் வகுப்பை தாண்டி எந்த வகுப்பையும் எட்டிக் கூட பார்த்தது இல்லை .ஒரு சொற்பொழிவு கேட்டேன் . ஏதாவது சாதிக்க வேண்டும் ."என்ற ஒரு வரிதான் என்னை மாற்றியது ."என்றார் .

நிறம் இருக்கும் மலருக்கு மணம் இருப்பதில்லை .
மணம் இருக்கும் மலருக்கு  நிறம் இருப்பதில்லை .
இயற்கை எலோருக்கும் பிரித்து வழங்கி உள்ளது .
ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு ஆற்றல் உள்ளது .தனியாக அமர்ந்து சிந்தித்து அந்த ஆற்றல் எது என்று கண்டிபிடியுங்கள் .

நண்பர் சொல்வதை அப்படியே கேட்காதீர்கள் .
உங்கள் திறமை என்ன என்பதை அடியாளம் காணுங்கள் .
பல திறமை இருந்தால் எந்தத் திறமையை மேம்படுத்துவது என்று தேர்ந்தெடுங்கள் .
முடிவெடுத்து முதலில் உங்களுக்குள் தேட வேண்டும் .பிறகு வெளியே தேட வேண்டும் .
பலருக்கு நான் வழி  காட்டுவேன் என்று உறுதி எடுங்கள் .
உங்கள் அடையாளம் இந்த உலகில் நீங்கள் இல்லாமல் போன பின்னும் நிலைக்க வேண்டும் .
உங்கள் அடையாளம் கவிதையாக இருக்கலாம் ,காவியமாக இருக்கலாம் ,ஓவியமாக இருக்கலாம் ,கண்டுபிடிப்பாக இருக்கலாம் ,கட்டிடமாக இருக்கலாம் எதுவாகவும் இருக்கலாம் .
எத்தனை இதயத்தில் தீபம் ஏற்றினீ ர்கள் என்பதே உங்கள் அடையாளம் .

பேச்சாளார் ஆக வேண்டும் என்று விரும்பினால் கற்பனையாக மனக்கண்ணில்  மேடை ஏறுங்கள் .வீட்டில் தனிமையில் பேசிப் பழகுங்கள் .பின் மேடையில் பேசுவது எளிதாகி விடும் 

இன்று அதிகாரத்தால் அதிகாரம் செய்ய முடியாது .
புன்னைகையை காட்டி செய்யும் அதிகாரம் நன்று .
அன்பைக் காட்டி செய்யும் அதிகாரம் சிறப்பு .
தேடுங்கள் தேடுங்கள் உங்களுக்குள் உங்களைத் தேடுங்கள் .உள்ளே தேடிய பிறகு வெளியே தேடுங்கள் .தேடல் முக்கியம் .
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்